குறைவடைந்த சிறுவர் திருமணங்கள்!!
சிறுவர் திருமணங்கள் குறிப்பிடத்தக்க அளவில் குறைவடைந்திருப்பதாக யுனிசெப் அமைப்பு அறிவித்துள்ளது.
இது வரவேற்கத்தக்க முயற்சியாகும் என்றும் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த பத்து வருடங்களில் 25 மில்லியன் சிறுவர் திருமணங்கள் தடுக்கப்பட்டிருப்பதாக யுனிசெப் அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்சமயம் 18 வயதிற்கு உட்பட்ட ஐந்து சிறுமிகளில் ஒருவர் திருமணம் செய்து வைக்கப்படுகிறார். கடந்த தசாப்தத்தில் 18 வயதிற்கு உட்பட்ட நான்கு சிறுமிகளில் ஒருவர் திருமணம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.