கல்முனை பொலிஸ் அதிகாரி தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை
மட்டக்களப்பு கல்முனை பொலிஸ் தலைமையக இன்ஸ்பெக்டர் நேற்று அதிகாலை 5.45 மணியளவில் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டு;ள்ளார் இந்த சம்பவத்தில் டபிள்யு.சி விஜேதுங்க என்பவரே உயிரிழந்தார் இச்சம்பவம் அவருடைய விடுதியில் இடம்பெற்று உள்ளது உயிரிழந்தவரின் சடலம் கல்முனை வை;மியசாலையில் நேற்று வைக்கப்பட்டிருந்தது நேற்றுமுன்தினம் கல்முனையில் மெத்தை வியாபாரிகள் மூவர் இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர் இச்சம்பவத்தையடுத்து அப்பகுதிக்கு பொறுப்பான பிரஸ்தாப பொலிஸ் அத்தியட்சகருக்கு உடனடி இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டிருந்தது என்றும் அதனை தாங்கிக் கொள்ள முடியாமல் ஏற்பட்ட விரக்தியினாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் ஒரு தகவல் தெரிவித்தது எனினும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.