புலிகளுக்கு ஆதரவு வழங்க முயற்சி அமெரிக்காவில் நால்வருக்கு சிறை
விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகம் செய்ய முயற்சித்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்தோனேசியாவின் முன்னாள் கடற்படை அதிகாரி ஒருவர் உட்பட நால்வருக்கு அமெரிக்காவில் இரண்டரை வருடம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு;ள்ளது என தெரிவிக்கப்படுகிறது அமெரிக்காவின் மேசிலன் பிராந்தியத்தில் வர்த்தக நடவடிக்கை என்ற போர்வையில் எரிக்ஒட்டுலோ என்ற முன்னாள் கடற்படை அதிகாரியும் ஏனைய மூன்று நபர்களும் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்று குற்றஞ் சாட்டப்பட்டிருந்தனர் அத்துடன் நான்குபேரும் அமெரிக்காவில் ஆயுதங்களை சேகரிப்பதற்கென இரகசிய வங்கி கணக்கொன்றையும் பயன்படுத்திவந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது இதேவேளை விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை சேகரித்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் மற்றுமொரு இந்தோனேசிய பிரஜைக்கும் இலங்கைபிரஜை ஒருவருக்கும் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது என்று பிறிதொரு தகவல் தெரிவிக்கிறது இதில் இலங்கையருக்கு 4வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த தகவல் மேலும் தெரிவிக்கிறது.