பேநசீரை வித்தியாசமாக படம் பிடித்தவருக்கு விருது

Read Time:1 Minute, 18 Second

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோவை வித்தியாசமான முறையில் படம் பிடித்த புகைப்படக்காரருக்கு உலகின் சிறந்த புகைப்படக்காரருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. லண்டனைச் சேர்ந்த அவர் பெயர் டேனியல் பெரிஹுலாக் (33). 2007 அக்டோபரில் கராச்சியில் தனது வீட்டில் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார் பேநசீர். அப்போது அவர் தலையில் இருக்கும் கோஷா துணியை சரி செய்யும்போது அதை படம் பிடித்தார் டேனியல். அந்தப் படத்தைப் பார்க்கும்போது, வேறு ஒருவர், அவரது தலையில் கோஷா துணியை சரிசெய்வது போல தோன்றும். இந்த அரிய புகைப்படம், லண்டனில் நேஷனல் தியேட்டரில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 1960 முதல் 2007 வரை பேநசீர் புட்டோவின் வாழ்க்கையை விளக்கும் ஏராளமான புகைப்படங்கள் அங்கு காட்சிக்கு வைக்கப்ட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த வார ராசிபலன் (11.07.08 முதல் 17.07.08 வரை)
Next post கட்சி நிகழ்வுகளில் அரச ஊடகங்களுக்கு இடமில்லை -ஐக்கிய தேசிய கட்சி தெரிவிக்கிறது