சார்க் மாநாட்டிற்கான பாதுகாப்பு கருதி மூவாயிரம் இந்திய துருப்புக்கள் இலங்கை வரவுள்ளன

Read Time:2 Minute, 3 Second

எதிர்வரும் தெற்காசிய ஒத்துழைப்பு மாநாட்டுக்காக இந்திய பிரதம மந்திரிக்கும் அந்த நாட்டின் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பளிக்கும் நோக்கில் மூவாயிரம் இந்திய துருப்புக்கள் இலங்கை வரவுள்ளன படையின் முதலாம் பிரிவில் சுமார் 100 துருப்புக்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று இலங்கை வரவுள்ளதாக லக்பிம ஆங்கில இதழ் செய்தி வெளியிட்டுள்ளது இரண்டாம் கட்ட துருப்பினர் எதிர்வரும் 20ம் திகதி இலங்கை வரவுள்ளனர் இறுதிக்கட்ட துருப்பினர் இந்த மாத இறுதியில் இலங்கைக்கு இந்திய போர்க்கப்பலின் மூலம் வரவுள்ளனர். இதனையடுத்து கொழும்பின் நட்சத்திர ஹோட்டல்கள் இரண்டின் அறைகள் முழுமையாக இந்திய படையினருக்காக இரண்டு வாரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தியர்கள் கொழும்பில் தங்கியிருக்கும் வரை இந்திய துருப்பினரை ஏற்றிவரும் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தரித்திருக்கும் என தெரிவிக்கப்படுகிறது அத்துடன் குண்டு துளைக்காத வாகனங்கள் மற்றும் உலங்கு வானூர்த்திகளும் இந்தியர்களுக்காக இந்தியாவிலிருந்தே கொண்டு வரப்பட்டுள்ளன இதற்கிடையில் சார்க் மாநாட்டில் பங்கேற்கும் பாகிஸ்தானியப் பிரதமருக்குப் பாதுகாப்புக்காக அந்நாட்டின் சுமார் 500 படையினர் வரை இலங்கைக்கு வரவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பதுங்கு குழிகள் மீது விமானங்கள் குண்டுவீச்சு; 25 விடுதலைபுலிகள் பலி
Next post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…