உலக உணவுத் திட்டத்தினால் 25 உணவு லொறிகள் வடக்கு பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன -திவயின
உலக உணவுத்திட்டத்தினால் 25உணவுலொறிகள் வடக்கு பகுதிக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது சுமார் 250 டொன் எடையுடைய உணப்பொருட்களை அனுப்பிவைக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார் இந்த நடவடிக்கைகள் அரசாங்கத்தின் பூரண கண்காணிப்பின் கீழ் இடம்பெறுவதாக தீர்மானிக்கப்படுகிறது தானியவகைகள், கோதுமைமா, எண்ணெய் போன்ற பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது கடந்த மாதம் அனுப்பி வைக்கப்படவிருந்த மனிதாபிமான உதவிகளை அரைவாசிக்கும் மேல் நிர்வாக சிக்கல்கள் காரணமாக அனுப்பி வைக்க முடியவில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.