வீட்டை உடைத்துக் கொண்டு புகுந்த கெப் வண்டி!!
வத்தேகம, அமுனுகம பிரதேசத்தில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த கெப் வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி அருகில் இருந்து வீட்டுடன் மோதியுள்ளது.
இந்த விபத்து காரணமாக வீடு பலத்த சேதத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து இடம்பெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் வீட்டிலிருந்தவர்கள் திருமண நிகழ்வொன்றுக்கு சென்றுள்ளதால், வீட்டில் வசிப்பவர்கள் ஆபத்தின்றி உயிர் தப்பியுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.
கெப் வண்டியின் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையே விபத்துக்கு காரணம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அரச நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமாக கெப் வண்டி ஒன்றே விபத்துக்கு உள்ளாகியுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.