அமெரிக்காவில் நடைபாலம் இடிந்து விழுந்து 4 பேர் பலி(உலக செய்தி)!!
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சர்வதேச பல்கலைக் கழகம் அமைந்துள்ளது. இதன் அருகே நெடுஞ்சாலையில் பொதுமக்கள் நடந்து செல்வதற்காக நடைபாலம் கட்டப்பட்டு வந்தது. 950 டன் எடை கொண்ட இந்த பாலம், நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்தது.
தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு துறையினர், மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 8 வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கி இருந்தன. 6 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளனரா என மோப்பநாய்கள் மூலம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.