பிரான்சு அதிபர் சர்கோசியுடன் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன்: மனைவி கர்லா புரூனி பேட்டி
53 வயதான பிரான்சு அதிபர் நிக்கோலஸ் சர்கோசியும், இத்தாலியைச் சேர்ந்த முன்னாள் சூப்பர் மாடல் கர்லா புரூனியும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து 40 வயதான கர்லா புரூனி கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வந்தன. இந்த நிலையில் சர்க்கோசி மீது தான் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தும் வகையில் இசை ஆல்பம் ஒன்றை புரூனி வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில்; தற்போது நான் கர்ப்பமாக இல்லை. இதற்காக வருத்தப்படுகிறேன். எனினும் சர்க்கோசியுடன் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறேன். ஆனால் அது இந்த வயதில் நடக்குமா? என்று தெரியவில்லை என்று தெரிவித்தார். கர்லா புரூனிக்கு முதல் கணவர் மூலம் ஒரு மகன் உள்ளார். சர்க்கோசிக்கு முதல் 2 மனைவிகள் மூலம் 3 மகன்களும், 2 வளர்ப்பு மகள்களும் இருக்கிறார்கள்.