இஸ்லாம் நமக்கு சொந்தமானது அல்ல!!

Read Time:1 Minute, 51 Second

“இஸ்லாம் ஜெர்மனி நாட்டிற்கு சொந்தமானது அல்ல” என தான் நம்புவதாக ஜெர்மனியின் புதிய உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

அகதிகள் தொடர்பான ஜனாதிபதி மெர்கலின் கொள்கைகளை தொடர்ந்து விமர்சித்து வந்தவர், ஹோர்ஸ்ட் சீஹொஃபர். ஆனால் தற்போது புதிய கூட்டணியில் இவர் முக்கிய பதவியை பெற்றுள்ளார்.

இவருடைய கருத்துகள் ஜெர்மனி கட்சிக்கு தீவிர வலது- மாற்று வாக்காளர்களை திரும்பப் பெறும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. இந்த கருத்துகளில் இருந்து மெர்கல் விலகியே உள்ளார்.

நாளிதழ் ஒன்றிற்கு அமைச்சர் சீஹொஃபர் அளித்த பேட்டியில், “கிறித்துவத்தை அடிப்படையாக கொண்டுள்ள ஜெர்மனி, தன் மரபுகளை விட்டுக்கொடுக்கக் கூடாது” என்று கூறியுள்ளார்.

“இஸ்லாம் ஜெர்மனி நாட்டிற்கு சொந்தமானது அல்ல. ஜெர்மனி கிறித்துவத்தை அடிப்படையாக கொண்டது” என்றார் அவர்.

“ஜெர்மனியில் நம்முடன் வாழும் முஸ்லிம்கள் நம் நாட்டை சேர்ந்தவர்கள்தான். ஆனால் அதற்காக நம் மரபுகளையும் பழக்கவழக்கங்களையும் விட்டுக் கொடுக்க முடியாது. முஸ்லிம்கள் நம்முடன் வாழ வேண்டும், ஆனால் நம் அருகிலோ நமக்கு எதிராகவோ இருக்க முடியாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்(சினிமா செய்தி)!!
Next post பிரபல நடிகையின் சென்னை வீடு ஏலத்தில்(சினிமா செய்தி)…. !!