விபத்தில் ஒருவர் பலி!!
எல்பிடிய – அலுத்கம பிரதேசத்தில் ஊறுகச்மங்சந்தியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
லொறு ஒன்று சைக்கிள் ஒன்றுடன் மோதியதிலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் பலத்த காயமடைந்த நபர் ஊறுகச்மங்சந்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
அநுராதகம, யடகல பகுதியை சேர்ந்த 17 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் லொறி ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஊறுகச்மங்சந்தி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.