இரவு உணவை 8 மணிக்குள் முடித்து விடுங்கள்( மருத்துவம் )!

Read Time:4 Minute, 33 Second

‘‘நம்முடைய முன்னோர்கள் அறிவுறுத்தியபடி Early To Bed Early To Rise என்பதுதான் சரியான வாழ்க்கை முறை. ஆனால், இன்றைய நமது அன்றாட செயல்கள் எல்லாம் இன்று முழுவதும் தலைகீழாக மாறிவிட்டன.

அவற்றில் ஒன்றுதான் இரவு உணவை தாமதமாக சாப்பிடும் வழக்கமும். இதனால், வயிற்றை நிரப்புகிறோம் என்பதை தவிர, வேற எந்த பயனும் நமக்கு கிடைப்பது இல்லை’’ என்கிறார் உணவியல் நிபுணர் சாந்தி காவேரி.

இரவு உணவை இதுபோல் தாமதமாக சாப்பிடுவதன் மூலம் பல்வேறு பிரச்னைகளும் உண்டாகிறது என்பதைத் தொடர்ந்து விளக்குகிறார்.

‘‘இரவு உணவை 8 மணிக்கு முன் முடித்துவிட வேண்டும். அதுதான் சரியான நேரம். அதற்கு மேல் தாமதமாகும் போது வயிற்றில் அமிலச்சுரப்பு உண்டாகும். நெஞ்சு எரிச்சல் ஏற்படும். சாப்பிட்ட உணவு எதுக்கலிக்கும். பலமணி நேரம் செரிமானம் ஆகாமல் அப்படியே தங்கியும் விடும்.

மேலும், இரவில் தாமதமாக உண்ணும் வழக்கத்தால் இயல்பைவிட, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவோம். எனவே, உடலில் கலோரி அளவும் அதிகரிக்கும். தூங்கும் நேரம் குறைந்து உடல் எடை அதிகரிக்கும். இரவில் நேரங்கழித்து சாப்பிடுவதால், உடல் எடையைக் குறைக்க முடியாது.

உணவியல் நிபுணர் என்ற அடிப்படையில், இரவில் தாமதமாக சாப்பிடுவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் என்று கூறுவதை பெரும்பாலும் யாரும் பின்பற்றுவது கிடையாது. இதை ஏன் நாங்கள் வலியுறுத்துகிறோம் என்றால் உரிய நேரத்தில் சாப்பிடாமல் இருத்தல், சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுப்பொருட்களை உண்ணுதல் போன்ற காரணங்களால் வளர்சிதை மாற்றங்கள் குறையும். ரத்தத்தில் டிரைகிளிசரைட் என்ற கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்கும். காலை, மதியம் என எந்த நேரத்து உணவாக இருந்தாலும், உரிய நேரத்தில் சாப்பிட்டு வந்தால்தான், நமக்கு அந்த உணவால் பயன் கிடைக்கும்.

அதனால் எந்த வகை உணவை, எந்த நேரத்தில், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை நன்றாக அறிந்து, அதனை பின்பற்றி வந்தால் உணவு வேளை மற்றும் உறங்கும் நேரம் சரியான சுழற்சியில் நடைபெறும். இரவில், சீக்கிரமாக சாப்பிடுவதால் செரிமான குறைபாடு, உடல் எடை அதிகரித்தல் போன்ற எந்தவித பிரச்னைகளும் இல்லாமல் முழு உடலும் ஆரோக்கியமாக இருக்கும் என பல மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

முக்கியமாக தூங்கச் செல்லும் 2 மணி நேரத்துக்கு முன்னால் சாப்பிடுவது சிறந்தது. இதன்மூலம் மாரடைப்பு போன்ற இதயம் தொடர்பான பாதிப்புகள் கட்டுப்படுத்தப்படும்.

சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும். இரவு வேளையில் நேரங்கழித்து சாப்பிடும் பழக்கம் உடையவர்கள் களைப்பு காரணமாக உடனே படுத்து விடுவார்கள். அவ்வாறு செய்வதால் செரிமானமாக போதுமான நேரம் கிடைக்காது.

மேலும், செரிமானம் மெதுவாகவும் நடைபெறும். இதனால், குடலுக்கு தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படும். அதேபோல், இரவு உணவு தாமதம் ஆகும்போது, காலை உணவு தவிர்க்கப்படுகிறது. தலைவலி வரும். உடலில் கொழுப்பு தங்கிவிடுகிறது. ஆகவே, இரவு சாப்பாட்டை எவ்வளவு சீக்கிரமாக சாப்பிடுகிறோமோ அவ்வளவும் உடலுக்கு நல்லது’’ என்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆபாசப் படத்துக்கு அடிமையான மகனின் கையை வெட்டிய தந்தை..!
Next post குளிர்சாதனப் பெட்டியில் சடலமாக கிடந்த பெண் பொலிஸ் அதிகாரி: தகாத உறவால் விபரீதம் !