புலிகளால் தடை செய்யப்பட்ட “கொரில்லா” நாவல் வெளியீடு!
எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தால் தடை செய்யப்பட்டுள்ள “கொரில்லா” நாவல் ஆங்கிலத்தில் மொழி பெயாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்தயாவின் “ரெண்டம் ஹவுஸ்” என்ற நிறுவனம் இந்நூலை வெளியிட்டுள்ளது. ஆயுதம் ஏந்திப் போராடுவதற்காக எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தில் சோர்த்துக்கொள்ளப்பட்ட 15 வயது சிறுவன் ஒருவன் அனுபவிக்கும் துயரங்களை மையமாக வைத்து இந்த நாவல் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை அனுஷிய சிவநாராயணன் என்பவர் மெழிபெயர்த்துள்ளார். இந்தியாவில் உள்ள எல்.ரீ.ரீ.ஈ. ஆதரவு அமைப்புக்கள் மொழி பெயர்ப்பு முயற்சிக்கு தடைவிதிக்க முயன்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.