ரஷிய முன்னாள் அதிபர் கார்ப்பசேவ் 1987-ம் ஆண்டு இந்தியா வந்தபோது கொல்ல நடந்த முயற்சி முறியடிப்பு

Read Time:1 Minute, 47 Second

ரஷியாவின் அதிபராக கார்ப்பசேவ் இருந்தபோது அவர் இந்தியாவுக்கு 1987-ம் ஆண்டு வந்தார். அப்போது அவரை கொல்வதற்கு ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டனர் என்பதும் அதை ரஷிய-இந்திய உளவுப்படையினர் முறியடித்தனர் என்பதும் இப்போது வெளியாகி உள்ளது. ரஷிய உளவுப்படையான கே.ஜி.பி.யின் தலைவரான கிக்டர் அலெய்னிகோவ் ஒரு பேட்டியில் இப்போது வெளிப்படுத்தி இருக்கிறார். அந்த பேட்டியில் அவர் கூறி இருப்பதாவது:- கார்ப்பசேவை கொலை செய்வதற்காக ஒரு தீவிரவாதக்குழு பாகிஸ்தான் எல்லையை கடந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது. இந்த தகவல் ரஷிய உளவுப்படைக்கும், இந்திய உளவுத்துறைக்கும் கிடைத்தது. உடனே ரஷியாவில் இருந்து தீவிரவாத எதிர்ப்பு படையை சேர்ந்த ஒரு குழு இந்தியாவுக்கு விரைந்தது. இந்த குழு கார்ப்பசேவ் செல்ல இருந்த இடங்களில் எல்லாம் விசேஷ பாதுகாப்பு சாதனங்களுடன் பாதுகாப்புக்கு நின்றது. கொலைகார கும்பல் டெல்லிக்கு வந்தபோது அதை இந்திய உளவுப்படையினர் கைது செய்தனர். இதன் மூலம் கார்ப்பசேவை கொல்ல நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. இவ்வாறு கிக்டர் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தினந்தோறும் கிளாமர் படங்கள்..
Next post அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர் பிரபாகரனிடமிருந்து பணம் பெறுவதாகச் சந்தேகம்