போராட்டத்தில் ஈடுபட்ட 100 திபெத்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது
சீனாவின் அங்கமான திபெத்துக்கு விடுதலை கோரி, திபெத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்படி ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 116 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 100 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் எனறு சீன அரசு அறிவித்து உள்ளது. 42 பேருக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிகிறது. கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு வன்முறையில் ஈடுபட்டவர்கள் தான் தண்டனைக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இந்த கலவரத்திலும், போலீஸ் நடவடிக்கையிலும் 200 பேர் பலியானதாக வெளிநாட்டில் உள்ள திபெத்திய அரசாங்கம் கூறி உள்ளன.