இரு பிள்ளைகளின் தாயை பாலியல் துஸ்பிரயோகம் செய்த மூவர் கைது!!
கிராந்துருகோட்டை, கின்னொருவ பகுதியில் 30 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயை பாலியல் துஸ்பிரயோகம் செய்த மூவரை கைது செய்துள்ளதாக கிராந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணின் கணவர் மஹியங்கனை வைத்தியசாலையில் சேவை புரிவதுடன் அவருக்கு 6 மற்றும் 2 வயதுகளையுடைய இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.
இன்று (22) அதிகாலை தனது பிள்ளைகளுடன் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் வீட்டின் ஜன்னல் ஊடாக சந்தேகநபர்கள் உள்ளே நுழைந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது தமது பிள்ளைகளுடன் சேர்ந்து கூச்சலிட்ட போது சந்தேகநபர்கள் கத்தியை காட்டி பயமுறுத்தியதாகவும், பின்னர் குழந்தைகளை உறங்கவைத்துவிட்டு வீட்டிற்கு வெளியில் வருமாறு கட்டளையிட்டதாகவும் குறித்த பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
தான் அவ்வாறு செய்த பிறகு தன்னை சந்தேகநபல்கள் மூவறும் சேர்ந்து துஸ்பிரயோகம் செய்ததாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணை மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அதே பகுதியை சேர்ந்த 24, 21 மற்றும் 19 வயதுடைய இளைஞர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.