நடிகை ஜீனத் பாலியல் புகார் தொழிலதிபர் கைது(சினிமா செய்தி) !!
பிரபல நடிகை ஜீனத் அமன் கொடுத்த பாலியல் புகாரில் பிரபல தொழிலதிபர் கைது செய்யப்பட்டார். பாலிவுட் முன்னாள் நடிகை ஜீனத் அமன் ஜூகு காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு புகார் கொடுத்தார். பிரபல தொழிலதிபர் ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அதன் பேரில், தொழிலதிபரை போலீசார் கைது செய்தனர். உள்ளூர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். ஜீனத் அமன் புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் கூறினர்