வெங்கடேஷ் ஜோடியானார் ஸ்ரேயா(சினிமா செய்தி) !!
ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரி கோஷெவை சமீபத்தில் திருமணம் செய்தார் ஸ்ரேயா. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிக்க அவர் முடிவு செய்துள்ளார். இந்நிலையில் தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்கும் படத்துக்கு ஹீரோயினை தேடி வந்தார் டைரக்டர் தேஜா. இதில் நடிக்க பல இளம் ஹீரோயின்கள் மறுத்து வந்தனர். சீனியர் ஹீரோவுடன் நடித்தால் இமேஜ் பாதிக்கும் என்பதாலேயே அவர்கள் மறுத்ததாக கூறப்பட்டது. இதையடுத்து ஸ்ரேயாவிடம் கால்ஷீட் கேட்டதும் அவர் நடிக்க சம்மதித்து விட்டார். விரைவில் அவர் படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.