முதுமையில் இளமை சாத்தியமா?(மருத்துவம்)

Read Time:2 Minute, 13 Second

வயதும் வாழ்க்கையும் ரிவர்ஸில் செல்லப் போவதில்லை. இருப்பினும், என்றும் பதினாறாக இருக்க முனைகிற முதியவர்கள் சிலரது ஆசைக்குத் தீனி போடுகின்றன. இளமைக்கு உத்தரவாதம் தருவதாகச் சொல்லப்படுகிற ஆன்ட்டி ஏஜிங் சிகிச்சைகள். இந்த சிகிச்சைகள் எந்தளவு உண்மையானவை?பதிலளிக்கிறார் நாளமில்லா சுரப்பிகள் மருத்துவர் ராம்குமார்.

மருத்துவம் சார்ந்தவர்கள், சாராதவர்கள் என இரு தரப்பினரும் ஆன்டி ஏஜிங் என்ற சொல்லை பிரபலமாக்கி விட்டார்கள். வயதாவதைத் தடுத்தல் என்ற கருத்தாக்கமே தவறானது. நிரூபணம் இல்லாதது. ஏராளமான ஹார்மோன்
களின் மாற்றங்கள் வயதாவதில் அடங்கியிருக்கிறது. வளர்ச்சியை நிர்ணயிக்கும் ஹார்மோன்களும் பாலியல் உணர்வைத் தூண்டும் சில முக்கிய ஹார்மோன்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இப்படி குறையும் ஹார்மோன்களைத் திரும்ப செலுத்துவது, வைட்டமின் குறைபாடுகளை நீக்குவது, சருமம் பொலிவாக இருக்க கொடுக்கப்படும் க்ரீம்கள், மருந்துகள் ஆகியவையும் ஆன்டி ஏஜிங் சிகிச்சையில் அடங்கும்.

இதனால் முழு இளமையுடன் மாறிவிட முடியாது. இதுபோன்ற ஆன்டி ஏஜிங் சிகிச்சைகளால் மாரடைப்பு, ரத்த அழுத்தம், பக்கவாதம், புற்றுநோய் போன்று பல நோய்கள் உருவாகும் அபாயம் உண்டு. இத்தனை அபாயங்கள் உள்ள வயதைக் குறைக்கும் சிகிச்சைகள் தேவையா என்பதை யோசிக்க வேண்டும். வயதைக் குறைக்கும் மந்திர மாத்திரை இன்னும் எவராலும் கண்டறியப்படவில்லை என்பதே உண்மை!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடல் சோர்வை போக்கும் மருத்துவம்!!
Next post இத 2 முறை செஞ்சாலே வெள்ளையாயிடலாம்(மகளிர் பக்கம்)…!!