நூலகத்தில் திருடப்பட்ட நூறு கோடி ரூபாய் புத்தகம் 10 ஆண்டுகளுக்குப் பின் மீட்பு
இங்கிலாந்து நூலகத்தில் திருடப்பட்ட ரூ.100 கோடி மதிப்புள்ள புத்தகம் 10 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்காவில் மீட்கப்பட்டது. உலக நாடக ஆசிரியர்களின் பிதாமகனான ஷேக்ஸ்பியர் எழுதிய புத்தகம் ஒன்று தர்ஹாம் பல்கலைக்கழக நூலகத்தில் இருந்து 1998-ல் திருடப்பட்டது. இந்நிலையில், அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள நூலகத்தை அண்மையில் அணுகிய ரெய்மண்ட் ஸ்காட் (51) என்பவர், தான் வைத்திருந்த ஷேக்ஸ்பியர் புத்தகத்தின் மதிப்பு குறித்து ஆய்வு செய்யக் கோரினார். நூலக நிர்வாகிகள் அந்த புத்தகத்தை ஆய்வு செய்தபோது, அது இங்கிலாந்து நூலகத்தில் திருடப்பட்டது என்பது தெரியவந்தது. இதையடுத்து ரெய்மண்ட் ஸ்காட் கைது செய்யப்பட்டார். 1623-ல் அச்சிடப்பட்ட அந்த புத்தகத்தின் இன்றைய மதிப்பு ரூ.100 கோடியாகும்.