புதிய பிரதமர் தெரிவு செய்யப்பட்டார்!!

Read Time:2 Minute, 9 Second

எத்தியோப்பியா, ஆப்ரிக்க கண்டத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். ஏறத்தாழ 100 மில்லியன் மக்கள் வாழும் இந்நாடு உலகின் நிலம்சூழ் நாடுகளில் மிகுந்த மக்கள்தொகை கொண்ட நாடும், ஆப்பிரிக்காவிலேயே நைஜீரியாவுக்கு அடுத்ததாக இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடும் ஆகும். அடிஸ் அபாபா இதன் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும் ஆகும்.

அந்நாட்டின் பிரதமராக ஐலிமரியாம் தேசாலென் கடந்த 2012-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது ஆட்சிக்கு எதிராக கடந்த மூன்று ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்நாட்டின் வளர்ச்சி நன்மைகள் சாதாரண மக்களுக்கு சரியாக கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

எத்தியோப்பியாவில் நிலவிவந்த குழப்பங்களுக்கு தீர்வுகாண பிரதமர் ஐலிமரியாம் தேசாலென் நீண்ட காலமாக முயற்சி செய்துவந்தார். ஆனால் அவரது முயற்சிகள் தோல்வியடைந்ததை பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக பிரதமர் ஐலிமரியாம் தேசாலென் கடந்த பிப்ரவரி 16 ஆம் திகதி ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், எத்தியோப்பியாவின் புதிய பிரதமராக அபிய் அகமது தேர்வு செய்யப்பட்டுள்ளார். எத்தியோப்பியா மக்கள் புரட்சிகர ஜனநாயக முன்னணி கூட்டணியை சேர்ந்த 180 பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து ஒருமனதாக அவரை தேர்வு செய்துள்ளதாக அந்நாட்டை சேர்ந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஏலத்தில் விடப்படும் டிரம்ப் நிர்வாண சிலை !!
Next post பேஸ்புக் நிறுவனத்துக்கு கெடு விதித்த அரசு !!