அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர் பிரபாகரனிடமிருந்து பணம் பெறுவதாகச் சந்தேகம்

Read Time:5 Minute, 19 Second

அண்மையில் அவுஸ்திரேலியப் பாராளுமன்றத்தில் அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஸ்ரீலங்காவின் இனப்பிரச்சினை சம்பந்தமாகச் சமர்ப்பித்துள்ள பிரேரணைக்குச் சர்வதேச ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டுள்ளன. இவ்வாறு ஜோன் மாபி எனப்படும் அவுஸ்திரேலியப் பாராளுமன்ற உறுப்பினர் கடந்த ஜூலை 2 ஆம் திகதி ஸ்ரீலங்கா இனப்பிரச்சினைக்குரிய தீர்வு பற்றிய பிரேரணையை பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளார். இந்தப் பிரேரணையில் ஜோன் மர்பி தெரிவித்திருக்கும் விடயங்கள் பற்றி சர்வதேச ஊடகங்கள் தரப்பில் வெளியிடப்பட்டிருக்கும் தகவல்களுக்கேற்ப அவர் ஸ்ரீலங்கா இனப்பிரச்சினையில் ஸ்ரீலங்கா அரசு யுத்தமூலமான தீர்வை நாடி புலிகள் இயக்கத்துடன் தீவிர மோதலில் ஈடுபட்டிருப்பதாகவும் இவ்வாறு யுத்தம் மூலம் புலிகள் இயக்கத்தை ஒழித்துக்கட்ட ஸ்ரீலங்கா அரசு முனைவது சாத்தியமற்றவிடயம் எனவும் அவ்வாறே யுத்தம் மூலம் இனப்பிரச்சினையைத் தீர்ப்பது என்ற ஸ்ரீலங்கா அரசின் கொள்கை நிலைப்பாடும் தவறானது எனவும் தெரிவித்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

மேலும் அவுஸ்திரேலியப் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் மர்பி தனது பிரேரணையில் ஸ்ரீலங்கா அரசு இனப்பிரச்சினையைச் சமாதானப் பேச்சுகள் மூலமே தீர்க்கவேண்டும் என வலியுறுத்தியிருப்பதுடன் அவ்வாறு புலிகளுடன் சமாதானப் பேச்சுக்களை ஸ்ரீலங்கா அரசு நடத்தவேண்டிய காலகட்டம் தற்போது ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இவ்வாறு ஸ்ரீலங்கா அரசு யுத்தம் மூலமே தீர்வு காண முயலும் நிலைப்பாட்டில் தொடர்ந்து உறுதியாக இருப்பதால் அரசை சமாதானப் பேச்சுக்களை நோக்கி அழுத்தம் கொடுக்க அவுஸ்திரேலிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவ்வாறே ஸ்ரீலங்காவுக்கு அவுஸ்திரேலிய அரசு தற்போது வழங்கிவரும் கடன் உதவிகள் உட்பட அனைத்துப் பொருளாதார உதவிகளையும் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டுமெனவும் ஜோன் மர்பி தனது பிரேரணையில் அவுஸ்திரேலிய அரசைக் கோரியுள்ளார்.

இவ்வாறு புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கும் அவருடைய குழுவினருக்கும் பகிரங்கமாகவே ஆதரவு தெரிவிக்கும் வகையில் மேற்படி அவுஸ்திரேலியப் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் மர்பியின் பிரேரணை அமைந்துள்ளதாகவும் இந்த வகையில் அவர் புலிகள் இயக்கத்துக்காகச் சர்வதேச ரீதியில் செயற்படும் இயக்கப் பிரதிநிதிபோல் செயற்படுவதாகவும் சில முக்கிய சர்வதேச ஊடகங்கள் விமர்சித்துள்ளன.

மேலும் இந்த வகையில் புலிகள் இயக்கத்துக்கு நெருக்கமாகவும் ஆதரவாகவும் அவுஸ்திரேலியா பாராளுமன்றத்தில் பிரேரணை சமர்ப்பித்திருக்கும் ஜோன் மர்பி அதன் மூலம் பிரபாகரனின் கட்டளையின் பேரில் புலிகள் இயக்கத்தினர் ஸ்ரீலங்காவில் மேற்கொண்டுவரும் இரத்ததாகம் கொண்ட மனிதப்படுகொலைகள். சொத்து உடைமைகளின் நாசங்கள் மற்றும் கொடிய பயங்கரவாதச் செயற்பாடுகளை ஆதரித்துள்ளார் எனவும் சில சர்வதேச ஊடகங்கள் எடுத்துக்காட்டியுள்ளன. இந்நிலையில் ஜோன் மர்பி பயங்கரவாதப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனிடம் கைக்கூலி வாங்கிச் செயற்படும் நபர் போலவே இருப்பதாக மேற்படி சர்வதேச ஊடகங்கள் கருத்துகளை வெளியிட்டுள்ளன. இவ்வாறு சந்தேகங்களையும் கருத்துகளையும் வெளியிட்டுவரும் சர்வதேச ஊடகங்களின் விமர்சனங்களை நோக்கும்போது புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மேற்படி அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் மர்பிக்கு பெருந்தொகையில் பணம் கொடுத்துள்ளதா என்ற கேள்வியே தற்போது எழுந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரஷிய முன்னாள் அதிபர் கார்ப்பசேவ் 1987-ம் ஆண்டு இந்தியா வந்தபோது கொல்ல நடந்த முயற்சி முறியடிப்பு
Next post புலிகளுக்கு ஆதரவாக கனடா அரசை கண்டித்த சிங்களப் பிரமுகர்