ஈரானை தாக்கும் இஸ்ரேல் திட்டத்துக்கு புஷ் ஆதரவு
ஈரானின் அணுசக்தி திட்டத்தை நிறுத்தி வைப்பதற்காக அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடையுமானால், அந்த நாட்டின் மீது ராணுவத்தாக்குதல் நடத்த இஸ்ரேல் ஆயத்தங்களை செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி புஷ் ஆதரவு அளித்து இருக்கிறார். ஈரானின் அணுசக்தி மையங்களை இஸ்ரேல் தாக்கி அழிக்கும் திட்டத்துக்கு அமெரிக்கா ஆதரவு தரும் என்று புஷ் நிர்வாகம் இஸ்ரேலிடம் தெரிவித்து உள்ளது. அமெரிக்க ராணுவ அதிகாரிகள் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தபோதிலும் புஷ் இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஆதரவு அளித்து இருக்கிறார்.