பெல்ஜியம் பிரதமர் ராஜினாமா
பெல்ஜியம் நாட்டு பிரதமர் தமது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்து இதற்கான கடிதத்தை மன்னரிடம் வழங்கி இருக்கிறார். பெல்ஜியம் நாட்டிலிருந்து தன்னாட்சி உரிமையை கோரி வரும் பிளம்மிஷ் மொழி பேசும் பகுதியுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து பிரதமர் லெடர்மே தமது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்திருக்கிறார். அவர் தமது ராஜினாமா கடிதத்தை பெல்ஜியம் மன்னருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். கடந்த 9 மாதங்களுக்கு முன்னர்தான் லெடர்மே பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். பிரதமரின் ராஜினாமாவை ஏற்பது குறித்து மன்னர் இரண்டாம் ஆல்பர்ட் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.