ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம் கிடையாது : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விளக்கம்!!(உலக செய்தி)

Read Time:2 Minute, 13 Second

மத்திய அரசு மீது தமிழகம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏப்ரல் 9-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த மத்திய அரசுக்கு 6 வார காலக்கெடு வழங்கி கடந்த மார்ச் 16ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் அளித்த காலக்கெடு மார்ச் 29-ம் தேதியுடன் முடிவடைந்தது. காவிரி மேலாண்மை அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வந்தது. உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத மத்திய அரசை கண்டித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்றே விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 9-ம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

தலைமை நீதிபதி விளக்கம்

தீர்ப்பில் சொன்னப்படி திட்டத்தை (ஸ்கீம்) உருவாக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி நீரில் தமிழகத்துக்கு உரிய பங்கு கிடைக்கும் என்று தலைமை நீதிபதி உறுதியளித்துள்ளார். காவிரி தண்ணீர் பிரச்சனையை நாங்கள் தீர்த்து வைப்போம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். தமிழ்நாடு விவசாயிகளின் பிரச்சனையை உணர்ந்து இருப்பதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். காவிரி நீரை பங்கீட செயல்திட்டத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா விளக்கமளித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நல்ல நடிகை என்று பெயர் எடுக்க வேண்டும் : பிரியா வாரியர்(சினிமா செய்தி)
Next post நீங்கள் வாசித்த கிரைம் நாவல் கதாபாத்திரங்கள் சினிமாவுக்கு வருகிறார்கள்!(சினிமா செய்தி)