துபையில் வெயில் 122 டிகிரியை தாண்டியது..
துபையில் வெயில் அளவு 122 டிகிரியை தாண்டியுள்ளது. பாலைவனப் பூமியான ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது வெயில் சுட்டெரிக்கிறது. சராசரியாக அங்கு 113 டிகிரி அளவிற்கு வெப்பம் நிலவுகிறது. துபையில் மிக அதிக பட்சமாக 122.18 டிகிரி வெப்பம் நிலவுவதாக காலிஜ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது. ஷார்ஜா, ராஸ் அல் ஹைமா, மின்ஹாட் ஆகிய நகரங்களில் நாளுக்குநாள் வெயிலின் அளவு அதிகரித்து வருவதாகவும் அந்த நாளிதழ் மேலும் தெரிவித்துள்ளது.