By 17 July 2008 7 Comments

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (ரிஎம்விபியின்) உள் முரண்பாடுகளும், தீர்க்கத் தெரியாமல் தவிக்கும் நலன் விரும்பிகளும்..

tmvpnew_pictures_149.jpganitom-jerry.pngதமிழ்ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைந்து பல வருடகாலங்களாக இலங்கை அரசாங்கத்திற்கெதிராகப் போராடி வந்தபோதும், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைமையின் மாற்றான் மனப்பாங்கு, தனிப்பட்ட சர்வாதிகாரம், ஒரு பக்க நியாயம், மாற்றுத்தமிழ் இயக்க எதிர்ப்பு, சகோதரப் படுகொலைகள், தூரநோக்கற்ற சிந்தனை, துர்க்குண சகவாசம், இனக் கொலைவெறி, இரத்த ஆசை என பல்வேறு உண்மையான காரணிகளை முன்வைத்து பண்பான முறையில் அவ்வியக்கத்திலிருந்து அமைதியாக வெளியேறியவர் கருணாஅம்மான். அவர்; அவ்வியக்கத்திலிருந்து வெளியேறிய பின் பல கசப்பான அநுபவங்களின் நிமித்தம் தமக்கென்று ஒரு அமைப்பு வேண்டுமென்று உணர்ந்ததன் பலனாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்னும் ஓர் அமைப்பை உருவாக்கினார். இது ஒரு அரசியலோட்டத்தினூடான அமைப்பாக பரிணாமித்து, பல வெற்றிகளையும் சுமந்து ஓர் மக்கள் சக்தியாகவே இது வெகுண்டெழுந்து வந்தது. இது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பின்னால் வெகுண்டெழுந்து வந்த மக்கள் கூட்டம் என்பதை விட கருணாஅம்மான் என்னும் ஒரு தலைவரின் பின்னால் வெகுண்டெழுந்து வந்த மக்கள் வெள்ளம் என்பதே சாலப் பொருத்தமாகும். இந்நிலை காலஞ்செல்லச் செல்ல காட்டாற்று வெள்ளமாகப் பெருக்கெடுத்து வந்ததே ஒழிய குறைந்ததாக இல்லை. இப்பெரும்; மக்கள் திரட்சியைக் கவனத்தில் கொண்ட அரசாங்கம், இம்மக்கள் திரள் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் பின்னால் திரழுகின்ற கூட்டம் அல்ல. அது கருணா அம்மானின் பின்னால் திரழுகின்ற மக்கள் கூட்டம் என்பதை தெளிவாக உணர்ந்து கொண்டது.

இதனையுணர்ந்த அரசாங்கம் ஒரு கணம் நிலநடுக்கத்தையே உணர்ந்து கொண்டது எனலாம். ஏனெனில் அரசாங்கம் கருணா அம்மானின் ஆரம்பகால, இடைக்கால, சமகால நிலைகளை ஆராய்ந்ததின் முடிவில் ஓர் உண்மையை உணர்ந்தது. அதாவது கருணா அம்மான் மக்களுக்காக எதையும் செய்யத் துணிந்தவர். அது மட்டுமல்ல சகல துறைகளிலும் ஊடறுத்த அறிவைப் பெற்றிருக்கின்ற ஒருவர். ஆதலால் இவரை நாம் சொல்கின்ற அனைத்தையும் அப்படியே சரி பிழை பார்க்காது கேட்டு செயற்படக் கூடிய பொம்மைத் தலைவராக, மனிதராக நினைப்பது முட்டாள்தனம். இவர் இப்படியே வளர்ந்து வருகின்ற போது, இவ்வமைப்பும் தளைத்தோங்குகின்ற போது, அரசாங்கம் ஜே.வி.பி. இற்குப் அஞ்சுவதிலும் பார்க்க கருணா அம்மானுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் அஞ்ச வேண்டியதிருக்கும் என்பதை தெளிவாக உணர்ந்து கொண்டது.

இதன் விளைவாக கருணா அம்மான் மக்கள் பணத்தை கையாடல் செய்தார் எனக் கூறி, கள்வனாக்கி, கயவனாக்கி ஓரங்கட்ட நினைத்ததுடன், தங்களுடைய சொல்லுக்குக் கட்டுப்படக் கூடியவரான ஒருவரையும் பதில் தலைவராக்கி, தலைவராகவே மாற்றியமைத்தது. இவையனைத்திற்கும் அரசாங்கத்திற்கு பக்கபலமாக இருந்து கொண்டு, செயலில் இறங்கி சாதித்துக் காட்டியவர்கள் இப்போதும் கூட இப்பிணக்கினை மூடி மறைத்துக் கொண்டு இப்பதில் தலைவரின் பின்னால் நின்று கொண்டு தலைவராகவே இவரைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

இவர்களே, கருணா அம்மான் வெளிநாட்டில் இருந்த போது கருணாஅம்மானுக்கு ஆதரவான விசுவாசிகளை தமது பக்கமாக்க வேண்டும் இல்லாது போனால் கொன்றுவிட வேண்டும் என பிள்ளையானுக்கு எண்ணெய் ஊற்றியவர்களாவர். இந்த வரிசையிலேயே அரசியலில் அறிவு பூர்வமாக நாட்டம் கொண்டிருந்ததுடன், கருணா அம்மானை மிகவும் நேசித்தவராக இருந்த திலீபனை பிடிக்க வேண்டும், அவமானப்படுத்த வேண்டும் என ஆலோசனை கூறியவர்களும் இவர்களேயாவர். ஆனால் இவர்களது கபடத்தனங்களுக்கு ஆட்படாத அந்த உண்மை விசுவாசி சயனைற் அருந்தி தனதுயிரைத் தலைவனுக்காக மாய்த்துக் கொண்டது உண்மையில் மகத்தானதாகும்.

இதனையெல்லாம் இப்படியாக நிகழ்த்திக் காட்டிவிட்டு, எங்கள் ஒரே தலைவன் கருணா அம்மான் தான். அவர் வெளிநாட்டிலிருந்து வரும்வரைதான் பதில் தலைவர் என்றெல்லாம் திட்டமிட்டு பொய்யான அறிக்கை விட்டவர்கள். இப்போது அம்மானை ஒரு செல்லாக் காசாகவே அவமதித்துத் திரிகிறார்கள். கருணா அம்மான் கையாடல் செய்தார் என அறிக்கை விட்ட இவர்களுடைய வங்கிக் கணக்குகளில் எத்தனை பெட்டிகள் தூங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை யாரறிவார்.

இவ்வாறான சுயலாபங்களுக்காகத் தானே தலைவன் மீது பழிசுமத்தி, புதிய தலைவரையே உருவாக்கிக் காட்டினார்கள் இவர்கள். அப்படியிருந்தும் வெளிநாட்டிலிருந்து அம்மான் வந்ததும் எமது கட்சியை வழிநடத்திச் செல்வார் என்றார்கள். ஆனால் இன்று அம்மான் நாட்டுக்கு வந்துள்ள போதும் கருணா அம்மானுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கும் என்ன தொடர்பு எனக் கேட்கும் நிலைக்கு தள்ளி விட்டுள்ளார்கள்.

கொழுகொம்பைத் தழுவி வளருமாம் கொடி, மேலும் மேலும் வளர்ந்து பெரிதாகுமாம். இப்போது கொடி கூறுமாம் நான்தான் வளர்ந்தேனே பெரிதாக வளர்ந்தேனே கொழுகொம்பு எனக்கெதற்கென்று விலத்தி விடுமாம். இப்போது கொடி ஒடிந்து, முறிந்து, விழுந்து, குப்பையாகி, சருகாகி விடுமாம். இதனை ஏன் இவ்விடத்தில் குறிப்பிடுகிறோம் என்றால், கொழுகொம்பு கருணாஅம்மானை குறிப்பிடுவதாகும். ஏனெனில் தேவைப்படும் போது கருணா அம்மானைத் தங்கமாகவும், தேவையில்லாத போத தகரமாகவும் பயன்படுத்தித் திரிவது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும்??

தலைவர் வந்தால் அவருடைய ஆலோசனைப்படியே இயங்குவோம், அவரே எங்களை வழிநடத்துவார், அவர்தான் எங்கள் ஒரே தலைவர் அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்றெல்லாம் கதையளந்தவர்களிடம் இப்போது தொடர்பு கொண்டு கேட்கின்ற போது தலைகீழாக பதில் உரைக்கின்றார்கள். பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்து, பொய்யினையே தடவிக் கொடுக்கின்றவர்களாகவே இவர்களிருக்கின்றார்கள். கருணாஅம்மான் வெளிநாட்டிலிருந்து திரும்பிய போது சந்திக்க போகாமலிருந்தார்கள். அது குறித்து வினவுகின்ற போது சபை முதல்வரிடம் கேட்க வேண்டுமாம், பொறுப்புக்கள் அதிகமாம் நேரம் இல்லையாம். எங்கிருந்து வந்ததையா.. இதெல்லாம்??

ஆக, மற்றவரை அவமதித்து, மற்றவரைக் கவிழ்த்து தங்களுக்கான சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்ளுகின்றவர்களும் இவ்வியக்கத்திற்குள் உளர் என்பது இப்போது தான் புரிய வந்துள்ளது. நீதிக்கு அப்பாற்பட்ட இவர்களுக்கு காலம் அதற்குரிய தண்டனைகளைத் தந்தே தீரும். இவ்வாறாக கருணா அம்மானுக்கு நிகழ்த்தப்பட்ட சதிகளையும், தற்போதைய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் கருணா அம்மானின் பங்கு குறித்தும் வினவுகின்ற போது, இன்னும் இன்னும் அம்புலிமாமா கதை சொல்லிக் கொண்டிருக்கிறார் பேச்சாளர் அஸாத் மௌலானா.

இவருடைய பொய்களும், புரட்டலும், கபடத்தனங்களும் எத்தனை நாட்களுக்கு எடுபடும் என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இன்னுமின்னும் பொய்களைச் சொல்லிக் கொண்டிருந்தாலும் பார்ப்பவருக்கு அனைத்தும் புரிந்து விடும் என்பதை முதலில் இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மறைத்து மறைத்து பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார். கொண்டையிலே மல்லிகைப் பூவும், தாழம்பூவுமாம், உள்ளுக்குள் ஈரும் பேனுமாம்.

கருணா அம்மான் கண்ட கனவு, அதன் திட்டம் என எதுவும் அறியாமல், அது எதை நோக்கி நகர்ந்தது அவருக்குள் என்ன சிந்தனையோட்டம் இருந்தது என்று கூடப் புரியாமல், இடைநடுவில் ஒருவர் அதனைக் கையேற்று நகர்த்திச் செல்வதென்பது முடியாத காரியமாகும். கருணா அம்மானிடமிருந்து பெற்ற திட்டங்களையோ, அரசாங்கம் தருகின்ற திட்டங்களையோ வைத்து எத்தனை நாட்களைத் தான் நகர்த்த முடியும் என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டியிருக்கிறது. சமயம் வரும்போது ஒருவரை வீழ்த்திவிட்டு மற்றவர் உயர்ந்து விடலாம் என்கிற எண்ணம் கொண்டால், முதலில் இந்த மட்டகரமான சிந்தனை கொண்டவர்களே வீழ்வது திண்ணமாகும்.

எதிர்பாராத போது நல்லவர்களைப் போல் நடித்து நயவஞ்சகத்தனங்களைக் கட்டவிழ்த்து சுய நலங்களைப் பேணிக் கொள்வது நாகரீகம் என நினைத்து விட்டார்கள் போலும். இவர்களின் இந்த மெத்தனப் போக்கு ஒருக்காலும் வெற்றியளிக்காது என்பதனையும் இவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இவர்கள் கருணா அம்மான் விசுவாசிகளுக்கு எதிராக ஆயுதங்களைப் பிரயோகித்ததைப் போன்று கருணா அம்மான் விசுவாசிகளும் ஆயுதங்களைப் பிரயோகித்திருந்தால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கமே சின்னாபின்னப்பட்டுப் போயிருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அப்படி நடந்து விடக் கூடாது என்பதில் தான் கருணா அம்மானும் அவரது விசுவாசிகளும் கவனமாயிருந்து அமைதி காத்தார்கள் என்பதையும் இந்த இடத்தில் புரிந்து கொள்ள வேண்டும்;. ஆகவே சமயோசித புத்தி என்பது புத்திஜீவிகளுக்கே உள்ளதாகும்.

அண்மையில் பத்திரிகையாளர்கள் மாநாடொன்றின் போது கிழக்கு மாகாண முதலமைச்சராக இருக்கின்ற சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் ஒரு கேலிக்கூத்தான அறிக்கையொன்றினை வெளியி;ட்டிருந்தார். அதாவது, வரதராஜப்பெருமாள் நாட்டைவிட்டு ஓடி விட்டதாகவும், அதனால் பலதமிழ் மக்கள் கொல்லப்பட்டதாகவும் ஆனால் வரதராஜப் பெருமாள் இன்னும் உயிருடன் இருப்பதாகவும் மிகவும் வேதனைப் பட்டுக் கூறியிருந்தார்.

முதலமைச்சர் ஆனபின்பும் இவரது கவலை எதைப்பற்றியது எனப்பார்க்கின்ற போது வேடிக்கையாக இருக்கிறது. நத்தையைக் கொண்டு மெத்தையில் வைத்தாலும் அது போகிற புதருக்குள் தான் போகுமாம் என்பார்கள். அதுபோல வரதராஜப் பெருமாள் உயிருடன் இருப்பது தான் இவரது கவலையாக இருக்கின்றது. அரசியல் ரீதியாக வேறெந்த தமிழனும் உயிர்வாழக் கூடாது என்பதாகவே இவரது கருத்து உள்ளது. கருணா அம்மான் கூட அரசியல் ரீதியாக மாற்றுக் கட்சி தொடங்கினால் கொல்லக் கூடத் தயங்க மாட்டார்கள் போலுள்ளது.

வரதராஜப் பெருமாள் நாட்டைவிட்டு ஓடுவதற்கும், பல தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கும் காரணகர்த்தாக்கள் யாரென்பதை மறந்து விட்டு கூறியிருக்கிறார் போலும், உங்களால் தானய்யா அவர் நாட்டை விட்டே ஓடவேண்டி வந்தது. இதையெல்லாம் மறந்து விட்டு கூறுகிறீர்களா? அல்லது புத்தி பேதலித்துப் போய் கூறுகிறீர்களா? அல்லது அஸாத் மௌலானா புத்தகங்களிலிருந்து படித்து விட்டுச் சொல்வதையெல்லாம் கேட்டு விட்டு வழவழாவித் திரிகிறீர்களா? நடந்தது என்ன, அதில் தமது பங்கு என்ன என்பது கூடப் புரியாமல் அறிக்கை விடும் உங்களை என்னவென்று ஐயா அழைப்பது. அஸாத் மௌலானா மனனஞ் செய்தவற்றை சொல்லி;த் தருகிறார் என்றால், அது யாருடன் சம்பந்தப்பட்டது, என்பதைக் கூடச் சிந்திக்காமல் வழவழாவி நீங்களே உங்களை முட்டாளாகக் காட்டிக் கொள்கிறீர்களே??

அது மட்டுமன்றி முதலமைச்சராக இருக்கின்ற இந்த நிலை நான் விரும்பி வந்த ஒன்றல்ல, நான் அரசியலில் ஈடுபாடு கொண்டவனுமல்ல என அடிக்கடி கூறி வருகின்றீர்கள். விரும்பாத ஒன்றை வலுக்கட்டாயமாக ஏற்றுக் கொள்வதென்பது வாழ்க்கையிலேயே ஜீரணிக்க முடியாத சங்கடமாக இருக்கும். ஆனால் உங்களுக்கு எந்த சங்கடங்களும் உள்ளதாகத் தெரியவில்லை. ஆதலால் நீங்கள் இதற்கு ஆசையூட்டப்பட்டு, ஆர்வமூட்டப்பட்டுத் தான் வந்துள்ளீர்கள் என்பது புலனாகின்றது. ஆதலால் தான் நீங்கள் இந்தப் பதவியில் தற்போது லயித்திருப்பதற்கு காரணமாகும்.

ரிஎம்விபி எனும் அமைப்பை உருவாக்கப்பட்ட ஆரம்பத்தில் நீங்களும் திறம்படத் தான் செயற்பட்டீர்கள். ஆனால் காலப்போக்கில் உங்களுக்கு, தங்களுடைய சுயநலங்களுக்காக ஆசையூட்டியதும், ஆர்வமூட்டியதும், உங்களை இப்போது வழிநடத்திக் கொண்டிருப்பதும், அமைப்புக்கு துரோகம் இழைத்ததும் உரியவர்களுக்கு இன்னும் உறுத்தாமலிருப்பது இன்னும் வேடிக்கையானது தான்.

இந்த அரசியல் நீரோட்டத்தில் கனவுகண்டு, திட்டமிட்டு செயற்பட்டு வந்த கருணாவை ஒதுக்கி வைத்திருப்பதென்பது நடக்க நினைக்கும் குழந்தையை படுக்க வைத்து வேடிக்கை பார்ப்பதற்கு ஒப்பானதாகும். அரசியலில் ஆர்வம் கொண்டிருந்த கருணாவை முடக்கி வைத்து விட்டு, அரசியலில் ஆர்வமேயில்லாத ஒருவர் அதனை வழிநடத்திச் செல்வதென்பது மூன்றாம் நபருக்கும் வலியை ஏற்படுத்தும் செயலாகும். ஆகவே மண்ணாசை, பொன்னாசை மட்டுமல்ல கொடிதானது, புகழ்ஆசை, பதவி ஆசை என்பது கூடக் கொடிதே என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நல்லவர்களைக் கூட பக்கத்திலிருக்கின்ற பேர்வழிகள் ஆசைகாட்டி வலுக்கட்டாயமாக வம்புக்குள் மாட்டி துரோகம் செய்யத் தூண்டி விடுகின்றனர். அது தீயது என்று தெரிந்தும் ஆசைத்தீயை மூட்டி பற்ற வைத்து விடுவார்கள். இவர்களின் துர்போதனைகளுக்கெல்லாம் தலைப்படாது இயக்கத்தை இயக்கமாக மதித்து, தலைவரை தலைவராக மதித்து பேசித்தீர்த்துக் கொள்ள வேண்டிய விடயங்களை பேசித்தீர்ப்பதே மக்கள் சேவகர்களின் கடமையாகும். ஆகவே இன்னும் இன்னும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்குள் பிரச்சினையில்லை என்று அம்புலிமாமா கதைவிட்டுக் கொண்டு இயக்கத்தை சிதைத்து விடாமல், பேச்சு மேற்கொண்டு ஒரு உன்னதமான முடிவை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாக உள்ளது…

அதிரடிக்காக.. திரு.செல்வபாரதி –மட்டுநகர்

51miniflormagiagifs.gif51miniflormagiagifs.gif(கொழும்பில் ரிஎம்விபித் தலைவர் கருணாஅம்மான் பதில்தலைவர் பிள்ளையான் ஆகியோர் சந்தித்து உரையாட முன் -நான்கு தினங்களுக்கு முன்- மட்டுநகரில் இருந்து எழுதி அனுப்பப்பட்ட ஆக்கம் இது!! கொழும்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் நிரந்தரமானதா? பலனளிக்குமா?? எனும் ஐயப்பாட்டிலேயே அதிரடி இதனைப் பிரசுரித்துள்ளது.)

Thankyou For.. WWW.ATHIRADY.COM7 Comments on "தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (ரிஎம்விபியின்) உள் முரண்பாடுகளும், தீர்க்கத் தெரியாமல் தவிக்கும் நலன் விரும்பிகளும்.."

Trackback | Comments RSS Feed

 1. kumar says:

  WELL DONE SELLVAPARATHI! KARUNA AMMAN IS A GREAT MAN! I’M FROM VALAICHENAI BUT I DON’T KNOW WHO IS PILLAIYAN, BUT I KNOW WHO IS KARUNA AMMAN, LONG LIVE OUR KARUNA AMMAN.

 2. maddu man says:

  karuna is a mudman, oru madayan. ithai vida ltte ilai irunthirukkalaam. thalapathi enra peyaraavathu nilaiththirukkum.

 3. cleiopa says:

  well done selvaparathi.karuna is a true leader.we all know that.

 4. supramaniam says:

  Both desrved to be punished by public. Both were bought by government and both were throkies.

 5. Prasad says:

  Karuna is a traitor, no one talk about him… he is not an important person in Tamils.
  Get him Lost!

 6. True Tamils says:

  KARUNA and PILLAIYAN are throkies

 7. suge says:

  apa karuna nakurthuka poonavan london?

Post a Comment

Protected by WP Anti Spam