எச்.1பி விசா தாக்கல் செய்வதை இந்திய நிறுவனங்கள் குறைத்துக் கொண்டன : அமெரிக்க ஊடகம் செய்தி வெளியீடு!!

Read Time:1 Minute, 47 Second

எச்.1பி விசா கோரி படிவங்கள் தாக்கல் செய்வதை இந்திய நிறுவனங்கள் குறைத்துக் கொண்டு விட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவில் உள்ள மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பெருநிறுவனங்கள் தங்களுக்கு தேவையான வேலையாட்களை இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து பணியமர்திக்கொள்ள இந்த எச்-1பி விசாவை அதிகமாக பயன்படுத்தி வந்தன. ஆனால் டிரம்பின் ஆட்சியில் எச்.1பி விசா மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து கலிஃபோர்னியா மாநிலத்தில் இருந்து வெளியாகும் செய்தி இதழ் ஒன்றில், அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தில் கொண்டு வரப்பட்டுள்ள எச்.1பி விசா மீதான கட்டுப்பாட்டால் பணியாளர்களும், அவர்களை பணியில் அமர்த்திய நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதிக அளவில் எச்.1பி விசாக்களை கோரும் இந்திய மென்பொருள் நிறுவனங்கள் தற்போது விண்ணப்பங்கள் அளிப்பதை திடீரென குறைத்துக் கொண்டு விட்டதாகவும், வெளிநாட்டு நிறுவனங்களும் எச்.1பி விசாவுக்கு விண்ணப்பிக்க தயங்குவதாகவும் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீமானை திகைக்க வைத்த நிருபர்! (வீடியோ)
Next post கற்ப்பை சூறையாடிய இந்திய ராணுவம்!!(வீடியோ)