விடத்தல்தீவு இராணுவத்தின் வசம்
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த மன்னார் விடத்தல் தீவு பிரதேசத்தை நேற்றுக்காலை இராணுவத்தினர் கைப்பற்றியிருக்கின்றனர் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது கடற்புலிகளின் பிரதான தளம் ஒன்று அமைந்திருந்த இந்தப் பகுதியில் படையினர் கடந்த சில தினங்களாகமேற்கொண்ட படைநடவடிக்கை நேற்றுக்காலை முடிவுக்கு வந்தது என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையில் 58வது டிவிஷன் படையினரே இத்தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றனர் என்றும் படைத்தரப்பில் தெரிவிக்கப்படுகிறது விடத்தல்தீவை கைப்பற்றும் நடவடிக்கையின் போது 30வரையான புலிகளைத் தாங்கள் கொன்றிருக்கின்றனர் என்று தெரிவித்துள்ள இராணுவத்தினர் தமது தரப்பில் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பான தகவல்கள் எவற்றையும் வெளியிடவில்லை இதேவேளை இதுதொடர்பாக விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து நேற்றுமாலைவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.