தொடராக திருடிவந்த பன்னிரண்டு வயதுடைய இரு சிறுவர்கள் பதுளையில் கைது
வீடுகள் பலவற்றில் பெறுமதிமிக்க நகைகள் கையடக்க தொலைபேசிகள் மற்றும் பணத்தை திருடினர் என்ற சந்தேகத்தின் பேரில் பன்னிரண்டு வயதுடைய இரு சிறுவர்களை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது பதுளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அசோக் விஜயரட்னவிற்கு கிடைத்த இரகசிய தகவலொன்றினையடுத்து பதுளையை சேர்ந்த கல்கந்த என்ற இடத்தின் இருவீடுகளை சுற்றி வளைத்த பொலிஸார் இவ்விரு சிறுவர்களையும் கைது செய்துள்ளனர் மேலும் இச்சிறுவர்களிடமிருந்து இரு கையடக்க தொலைபேசிகள் மற்றும் தங்கநகைகள் உட்பட 47ஆயிரம் பெறுமதிமிக்க பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர் பதுளையை சேர்ந்த பாடசாலையொன்றில் தரம்6ல் கல்விகற்கும் இம்மாணவர்களே கைது செய்யப் பட்டவர்களாவர். பதுளைப் பகுதியில் உள்ள கல்கத்த ரிதிபான புவக்கொடமுள்ள ஆகிய இடங்களின் வீடுகளினது யன்னல்களை உடைத்து உட்புகுந்தே இத்திருட்டுக்களை மேற்கொண்டனர் என ஆரம்ப விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் இச்சிறுவர்கள் நாளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் என்றும் இந்த திருட்டுக் குறித்து பதுளைப் பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.