வெளிநாட்டவரின் இருநாள் ஆட்டத்துக்காக 60வருடம் வாழ்ந்த மக்களை விரட்டுவதா? -கொம்பனித்தெரு விவகாரத்தால் ஐ.தே.கட்சி சீற்றம்

Read Time:3 Minute, 40 Second

சார்க் மாநாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக கொழும்பு கொம்பனித்தெருவில் அமைந்துள்ள 200 வீடுகளை இடித்துத்தள்ளி அம்மக்களை அங்கிருந்து வெளியேற்றும் அரசின் திட்டத்திற்கு ஐக்கிய தேசிய கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது வெளிநாட்டுத்தலைவர்கள் இங்கு வந்து இரண்டு நாட்கள் ஆடிவிட்டுப் போவதற்காக 60வருடங்களாக வசித்துவரும் கொம்பனித்தெரு மக்களை விரட்டியடிக்கும் அரசின் நடவடிக்கையை ஒருபோதும் நாம் ஏற்கமாட்டோம் என்று அக்கட்சியினர் தெரிவித்திருக்கின்றனர் எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஐக்கிய தேசிய கட்சியின் எம்பி ரவி கருணாநாயக்கவே மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் தொடர்ந்தும் கூறியவை வருமாறு இலங்கையில் சார்க்மாநாடு நடைபெறுவதையொட்டி அரசு கொழும்பில் புதுமையான விதத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. போக்குவரத்து சேவைகள் மட்டுப்படுத்தப்படுகின்றன, பாடசாலைகள் மூடப்படுகின்றன எதற்கு இந்த கெடுபிடி?? இலங்கை வரும் மன்மோகன்சிங் ரயிலிலா பயணிக்கப் போகிறார்? பாகிஸ்தான் பிரதமர் பாடசாலைக்கா போகப் போகிறார்? எதற்காக இவ்வாறான பாதுகாப்புக் கெடுபிடியை அரசு மக்கள் மீது மேற்கொள்ள வேண்டும்? இந்த பாதுகாப்புக் கெடுபிடியில் மிகமோசமான ஒன்றுதான் கொம்பனித்தெரு மக்களை வெளியேற்ற எடுக்கப்படும் நடவடிக்கை. இரண்டு நாட்கள் மாத்திரம் இங்குவந்து ஆடிவிட்டுப் போகவுள்ள வெளிநாட்டுத் தலைவர்களுக்காகவா 60வருடங்களாக வசித்து வந்த மக்களை விரட்டுவதா? இந்த மக்களின் குடியிருப்பு எந்த வகையில் சார்க் மாநாட்டுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று தெரியவில்லை இதற்கு முதலும் சார்க் மாநாடு இலங்கையில் இடம்பெற்றது அப்போது இவ்வாறான தேவையற்ற பாதுகாப்புக் கெடுபிடிகள் மக்கள் மீது மேற்கொள்ளப்படவில்லை. கொம்பனித்தெரு மக்கள் ஒரு கிழமைக்குள் அவர்களின் இடங்களை விட்டு எழும்ப வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சு இம்மாதம் 10ம்திகதி கடிதமொன்றை அனுப்பியுள்ளது ஆனால் அந்த மக்கள் எங்கு செல்ல வேண்டும் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை இதுஒரு முட்டாள்தனமான உத்தரவாகவுள்ளது அரசின் இந்த நடவடிக்கையை நாம் மிக வன்மையாக எதிர்க்கிறோம் மேலும் இம்மக்களை எழுப்ப நாம் இடமளிக்கப் போவதில்லை என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செங்கலடி ஈ.பி.டி.பி முகாம் பகுதியில் புதைக்கப்பட்ட சடலம் மீட்பு, ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் கைது
Next post நம்பகத்தன்மையை இழந்து விட்டார் முஷாரப்: பராக் ஒபாமா