ரத்தத்தை சுமந்து செல்லும் டுரோன்கள்: ருவாண்டாவை தொடர்ந்து அமெரிக்காவிலும் சோதனை வெற்றி!!(உலக செய்தி)
Read Time:1 Minute, 11 Second
அவசர காலத்தில் ரத்தத்தை கொண்டு செல்ல அதிவேகத்தில் பறந்து செல்லும் டுரோன்கள் அமெரிக்காவில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஜிப்லைன் எனும் ஆளில்லா விமான போக்குவரத்து சேவை மூலம் மருத்துவ தேவைகளுக்கான இரண்டாம் தலைமுறை டுரோன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து சென்று மருத்துவ சேவைக்கு வழிவகுக்கும் வகையில் டுரோன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே ருவாண்டாவில் டுரோன் மூலம் ரத்தம் கொண்டு செல்லும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவிலும் இச்சேவை தொடங்கப்பட்டுள்ளது. 20 கிலோ எடை கொண்ட டுரோன்களில் 1.75 கிலோ எடையிலான பொருட்களை எடுத்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Average Rating