வவுனியா பூந்தோட்டம் அகதிமுகாமில் ஏற்பட்ட தீவிபத்தில் முகாம் முற்றாக சேதம்
வவுனியா பூந்தோட்டம் அகதிமுகாமில் ஏற்பட்ட தீவிபத்தில் முகாம் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் 5பேர் தீக்காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நேற்றுக்காலை 9.30 மணியளவில் இந்த தீவிபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது மின்சார ஒழுங்கின்மை காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர் சுமார் 20 நிமிடங்களில் முழு அகதி முகாமும் எரிந்து சாம்பலாகியதாக தெரிவிக்கப்படுகிறது பொலிஸார் இராணுவத்தினர் மற்றும் வான்படையினர் இணைந்து தீயணைப்பு பணிகளை மேற்கொண்டதாகவும் எனினும் அவர்களது முயற்சி பலனளிக்கவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது ஏற்கனவே சொல்லொன்னா துன்பங்களை அனுபவித்து வந்த வவுனியா பூந்தோட்ட அகதிகள் மேலும் அசௌகரிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது