2.0 படத்தில் ஐஸ்வர்யாராய் சஸ்பென்ஸ்!!(சினிமா செய்தி)

Read Time:1 Minute, 48 Second

ரஜினி நடிக்கும் 2.0 படத்தை ஷங்கர் இயக்குகிறார். அக்‌ஷய்குமார் வில்லனாக நடிக்கிறார். விஞ்ஞானி, ரோபோ என இரட்டை வேடத்தில் ரஜினி நடித்திருக்கிறார். ஹீரோயினாக எமி ஜாக்ஸன் நடித்திருந்தாலும் அவரும் இன்னொரு ரோபோவாகவே வருகிறார். கடந்த 2 வருடமாக இதன் படப் பிடிப்பு நடந்து முடிந்தும் தொழில்நுட்ப கிராபிக்ஸ் காட்சிகள் காரணமாக படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இப்படத்துக்கு பிறகு அறிவிக்கப்பட்ட ‘காலா’ படம் முற்றிலும் முடிந்து சமீபத்தில் தணிக்கையில் யு/ஏ சான்றிதழும் வழங்கப்பட்டது. வரும் 27ம் தேதி இப்படம் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது. 2.0 படத்தில் சஸ்பென்ஸ் பாத்திரமாக ஐஸ்வர்யாராய் நடித்திருக்கிறார் என பட வட்டாரங்களில் தகவல் கசிந்துள்ளது. விஞ்ஞானி ரஜினியின் மனைவியாக இவர் நடிக்கிறார்.

ஆனால் படத்தில் ஒருசில காட்சிகளில் மட்டுமே அவர் இடம்பெறுவார் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் இவரது கதாபாத்திரத்துக்கு டப்பிங் கலைஞர் ஒருவர் டப்பிங் பேசினார். ஐஸ்வர்யாராய்க்கு டப்பிங் பேசியதாக அவர் கூறியதையடுத்து ஐஸ்வர்யாராய் கதாபாத்திரம் படத்தில் இடம்பெற்றிருக்கிறது என்பது உறுதியானது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரஜினியுடன் கைக்கோர்க்கிறாரா விஜய்? தளபதி தரப்பிலேயே வெளிவந்த சூப்பர் தகவல்!!(வீடியோ)
Next post செக்ஸில் பிரச்சினையா ? (அவ்வப்போது கிளாமர்)