அமெரிக்கா: சாண்ட்விச்சுக்குள் இருந்த கத்தி
அமெரிக்காவை சேர்ந்தவர் ஜான் அக்னேசினி. 26 வயதான இவர் ஒரு பத்திரிகையில் பக்க வடிவமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் பாதாள ரெயிலில் தான் அலுவலகத்துக்கு செல்வது வழக்கம். ரெயில் நிலையத்தில் உள்ள ஒரு கடையில் தான் சாண்ட்விச் வாங்கி சாப்பிட்டு விட்டு வேலைக்கு செல்வார். சம்பவத்தன்று அவர் அந்த கடையில் சாண்ட்விச் வாங்கி சாப்பிட்டபோது, பிரட்டுக்குள் 7 அங்குல நீள கத்தி இருப்பதை பார்த்து அதிர்ந்து போனார். நல்லவேளை நான் அதை பார்த்து விட்டேன். இல்லாவிட்டால் என்னவாகி இருக்கும் என்று சொல்லும் ஜான், இதுபற்றி கடை ஊழியரிடம் புகார் செய்தபோது அவர் இதுபற்றி விசாரிப்பதாக மட்டும் கூறினார். வருத்தம் தெரிவிக்கக்கூட இல்லை என்கிறார். இதனால் கோபம் அடைந்த அவர் கோர்ட்டில் அந்த கடை மீது வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.