இறந்து விட்டதாக கூறப்பட்ட குழந்தை உயிருடன் இருப்பது கண்டுபிடிப்பு

Read Time:1 Minute, 54 Second

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் உரிய காலத்திற்கு முன் பிறந்த பிள்ளை இறந்து விட்டதாகக் கூறப்பட்ட போதும் பின்னர் அது உயிரோடிருப்பது தெரியவந்தது. டாக்டர்களின் கவனக்குறைவால் அந்தப் பிள்ளையை பெற்றோர் இழக்கும் சூழ்நிலை ஏற்பட்ட போதும் தெய்வாதீனமாக அந்தக் குழந்தை தப்பியுள்ளது. இது தொடர்பாகத் தெரியவருவதாவது; “முதல் பிரசவத்திற்காக இளம் தாயொருவர் அஷ்ரப் ஞாபகார்த்த ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு புதன்கிழமை மாலை குறைப்பிரசவமாக பெண் பிள்ளையொன்று பிறந்துள்ளது.எனினும், அந்தப் பிள்ளை இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறவே பிள்ளையின் தந்தை அடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு விட்டு அங்கு வந்து அந்த சிசுவைத் தூக்கிய போது குழந்தை உயிருடனிருப்பதை அவதானித்து தாதியரிடம் கூறவே அவர்கள் டாக்டர்களை அழைத்து வந்து காட்டிய போது குழந்தை உயிருடன் இருப்பது தெரியவந்தது. தற்போது அந்தப் பிள்ளை கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் பராமரிக்கப்பட்டு வருகிறது. பொறுப்பானவர்களின் பொறுப்பற்ற செயலால் ஏற்படவிருந்த பெருந்தவறு தெய்வாதீனமாக தவிர்க்கப்பட்டு விட்டதாக குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
Next post சவூதி அரேபியாவிலிருந்து நாடு திரும்ப நூற்றுக்கணக்கான இலங்கை பெண்கள் காத்திருப்பு