By 6 April 2018 0 Comments

ட்ரெண்டாகும் க்ராப்ட் ட்ரவுசர்ஸ்!!(மகளிர் பக்கம்)

‘ஸ்பைடர்’ படத்தின் ‘சிசிலியா’ பாடலில் மகேஷ்பாபு அணிந்து வரும் முக்கால் பேண்ட்தான் இப்போது ட்ரெண்ட். இப்படி முக்கால் என்று அழைத்தால் காறித் துப்புவார்கள் இல்லையா? எனவே கெத்தாக இதை க்ராப்ட் ட்ரவுசர் என்கிறார்கள். கிராமங்களில் சற்று வளர்ந்த சிறுவர்கள் அணியும் பழைய பேண்ட்கள் முழங்கால் வரை இருந்தால் அவரை ‘ஏய் குதிரைக்காரா…’ எனக் கிண்டல் செய்வார்கள். அதையே மகேஷ் பாபு அணிந்தால் ஸ்டைல்! இப்படிப்பட்ட பகடிகள் ஒரு புறம் படை எடுத்தாலும் இந்த முக்கால் பேண்ட் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதற்கெல்லாம் மூலகர்த்தாவான அந்த டிசைனர் யாரென தேடிப்பிடித்தோம். ‘‘ஹாய்! ஐயம் அக்‌ஷய் தையாகி (MyFashGram), ஹ்ருத்திக் ரோஷனின் பெர்சனல் டிசைனர்…’’ என கூல் அறிமுகம் செய்தபடி தொடர்ந்தார். ‘‘‘சிசிலியா…’ பாடல் உருவாக்கத்தின்போது எனக்கும் மகேஷ் பாபுவுக்கும் இருந்த ஒரே எண்ணம், எதேனும் புதிதான லுக்கை தர வேண்டும் என்பதுதான். பாடலை ஐரோப்பாவில் ஷூட் செய்கிறார்கள் என்று கேள்விப்பட்டதும். காஸ்ட்யூமுக்கு ஏன் ஐரோப்பியன் ஸ்டைல் கொடுக்கக் கூடாது என்று தோன்றியது.

அப்படித்தான் இந்த கேரட் க்ராப்ட் சைனோவை (க்ராப்ட் ட்ரவுசர்களின் மற்றுமொரு பெயர்) தேர்வு செய்தோம். இந்த டிசைன் மகேஷ் பாபுவுக்கும் பிடித்துவிட்டது. இந்த க்ராப்ட் ட்ரவுசர்கள் மீதான ஆர்வம் இந்தியர்களிடம் கொஞ்சம் மெதுவாகத்தான் அதிகரித்து வருகிறது. இப்போது இதில் நிறைய வெரைட்டிகள் இறக்குமதியாகின்றன. என்னைப் பொறுத்தவரை எந்த உடையானாலும் நமக்கு எது மேட்ச் ஆகுமோ அதை உடுத்துவதுதான் நல்லது. இந்த க்ராப்ட் ட்ரவுசர்களுக்கு எனச் சில ரூல்ஸ் இருக்கின்றன. கொஞ்சம் டைட்டாக, உடலை ஒட்டியபடி அணிந்தால் ட்யூனிக் ஸ்டைல் அல்லது ஃபிட்டிங் ஷர்ட் அணியலாம்.

அதே கொஞ்சம் ஃபார்மல் பாணி ட்ரவுசர் எனில் கைகள் மடிக்கப்பட்ட ப்ளேசர் அணியலாம். இந்த க்ராப்ட் ட்ரவுசரை ஆண், பெண் இருவருமே உடுத்தலாம். ஒல்லியாகவும் உயரமாகவும் இருப்பவர்களுக்கு எடுப்பாக இருக்கும். கொஞ்சம் பப்ளி உடல்வாகு கொண்டவர்கள் ஃபார்மல் ஸ்டைல் லூஸ் ட்ரவுசர்களை அணியலாம்…” என்றார் அக்‌ஷய் தையாகி. க்ராப்ட் ட்ரவுசர்களில் என்னென்ன வெரைட்டிகள் உள்ளன என டிசைனர் திவ்யாவிடம் கேட்டோம். ‘‘கூலான லுக் விரும்புவோர்களின் இப்போதைய சாய்ஸ் இந்த க்ராப்ட் ட்ரவுசர்கள்தான். இது இத்தாலி நாட்டு ஃபேஷன் வரவு.

இதில் நிறைய டிசைன்கள் இருந்தாலும் ஒரே அளவுதான். கால் மூட்டுக்குக் கீழும் கணுக்காலுக்குமேலும் இருக்க வேண்டும். இந்த க்ராப்ட் ட்ரவுசர்களின் முக்கிய மேட்ச் காலணிகள்தான். உடைக்கு எவ்வளவு மெனக்கெடுகிறோமோ அந்த அளவுக்கு காலணிக்கும் மெனக்கெட வேண்டும். ஏனெனில் கணுக்காலில் ஆரம்பித்து முழுமையாக கால்களின் அழகை எடுத்துக்காட்டும் என்பதால் சரியான காலணிகளைப் பயன்படுத்துவது நல்லது. ஆண்கள் முடிந்தவரை லோபர்களை பயன்படுத்தலாம். கொஞ்சம் சின்ன கால்கள், மற்றும் ஒல்லி பெல்லி தேகக் கண்மணிகளின் சிறப்பு உடை இந்த க்ராப்ட் ட்ரவுசர்கள்.

ஆனாலும் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். என்ன… மேலே போடும் டாப்களில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். பென்சில் டிப், கேரட் கட், ஃபார்மல் லூஸ் க்ராப்ட் , பலாஸோ ஸ்டைல் கட் என வெரைட்டிகள் ஏராளம். ஆனால், நமக்கு எது செட் ஆகும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். இந்த உடை கால்களைப் பளிச்சென காட்டும் என்பதால் கால்களை முறைப்படி பராமரிப்பது மிகவும் முக்கியம்.

சில பென்சில் டிப் ஸ்டைல் க்ராப்ட் ட்ரவுசர்களை கொஞ்சம் எடுப்பான பின்னழகு உள்ள பெண்கள் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், அதை இன்னும் பெரிதாகக் காட்டும். வேண்டுமானால் பின்புறத்தை மறைப்பது போன்ற குர்தா அணியலாம். சில பெண்கள் காட்டன் குர்தாக்களுடன் இந்த க்ராப்ட் பேண்ட்களைப் பயன்படுத்துகிறார்கள். அப்படிப் பயன்படுத்துகையில் க்ராப்ட் லெக்கிங்ஸ் பயன்படுத்துவது சிறந்தது…’’ என்கிறார் திவ்யா.Post a Comment

Protected by WP Anti Spam