புலிகளுக்கு ஆயுதம் வாங்க உதவிய கடற்படை ஜெனரலுக்கு அமெரிக்காவில் சிறைத் தண்டனை

Read Time:3 Minute, 40 Second

சில வருடங்களுக்கு முன் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் வாங்க உதவியவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் இந்தோனேசியக் கடற்படை ஜெனரலாகிய அமெரிக்கர் ஒருவரை அமெரிக்க பொலிஸ் அதிகாரிகள் கைது செய்திருந்தனர். எரிக் வோட்ரலோ எனப்படும் அந்த முன்னாள் கடற்படை ஜெனரலை புலிகள் இயக்கத்துக்காக விமான அழிப்பு ஏவுகணைகள் உட்பட சக்திவாய்ந்த நவீன ஆயுதங்கள் யுத்த உபகரணங்களை வாங்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த புலிகள் இயக்கத்தினருக்கு அவற்றை வாங்கவும் வழங்கவும் உதவி செய்தார் என்ற தகவலின் அடிப்படையிலேயே அமெரிக்க அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்திருந்தனர். பின்னர் அமெரிக்க பொலிஸ் அதிகாரிகள் அந்த முன்னாள் கடற்படை ஜெனரலிடம் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின்போது அவர் எவ்வாறு புலிகள் இயக்கத்தினருக்கு மேற்படி யுத்த ஆயுதங்கள், உபகரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு உதவி செய்தது பற்றிதெரிவித்ததைத் தொடர்ந்து யுத்த ஆயுதங்களைப் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுக்கு வழங்க உதவினார் என்ற குற்றச்சாட்டின்பேரில் அவர் மீது அமெரிக்க நீதிமன்றத்தை வழக்குத் தாக்கல் செய்தனர். நீண்டகாலமாக நடந்து வந்த மேற்படி வழக்கு விசாரணைகளிலிருந்து குறித்த முன்னாள் கடற்படை ஜெனரல் எரிக் வோட்ரலோ புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் விமான அழிப்பு ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களைப் பெற்றுக்கொள்ள உதவியது பற்றிய அமெரிக்க பொலிஸ் அதிகாரிகளின் குற்றச்சாட்டுகள் அண்மையில் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அமெரிக்க நீதிமன்றம் முன்னாள் கடற்படை ஜெனரல் எரிக் வோட்ரலோவுக்கு இரண்டரை வருட சிறைத்தண்டனையை அண்மையில் நிகழ்த்த இறுதி வழக்கு விசாரணையின்போது விதித்துள்ளது. மேற்படி வழக்கு விசாரணைகளின்போது அமெரிக்க பொலிஸ் அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கைகளுக்கு ஏற்ப நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை எரிக்வோட்லோ ஏற்றுக்கொண்டார் எனவும் இதனால் அவர் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகள், யுத்த ஆயுதங்கள், உபகரணங்களைப் பெற உதவியது நீதிமன்றத்தில் தெளிவாக நிரூபிக்கப்பட்டது எனவும் நிருபணங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி குறித்த தவணையின்போது எரிக் வோட்ரலோவுக்கு 2 1/2 வருட சிறைத் தண்டனையை விதித்தார் எனவும் மேற்படி அமெரிக்க தரப்பு தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒலிம்பிக் தொடக்க விழா: மன்மோகனுக்கு அழைப்பில்லை?- சீனா விளக்கம்
Next post Progress of Wanni theatre of operations..