90ஆவது பிறந்தநாள் கொண்டாடிய நெல்சன் மண்டேலா

Read Time:1 Minute, 20 Second

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா தனது 90ஆவது பிறந்த நாளை வெள்ளியன்று கொண்டாடினார். தென்னாப்பிரிக்காவை அதன் இனவெறி ஆட்சியிலிருந்து ஜனநாயக ஆட்சிக்கு கொண்டுவந்த வரலாற்று சிறப்புக்கு சொந்தக்காரரான மண்டேலா, கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்பே முழுநேர அரசியலில் இருந்து விலகிவிட்டிருந்தார். நெல்சன் மண்டேலாவின் 90ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த சிலநாட்களாகவே வாழ்த்துச் செய்திகள் வந்துக் குவிந்த வண்ணம் உள்ளன. தவிர இதனை ஒட்டி பலவித நிகழ்ச்சிகளும் நடந்திருந்தன. சென்ற மாதம் லண்டனில் நடந்த எய்ட்ஸ் விழிப்புணர்வு இசை நிகழ்ச்சிகூட மண்டேலாவின் பிறந்தநாள் கொண்டாட்டமாகத்தான் அமைந்திருந்தது. தென்னாப்பிரிக்காவில் அவரது பிறந்த நாள் நினைவு நாணயமும் தபால் தலையும் வெளியிடப்பட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாடு கடத்தப்பட்ட 200 இந்தியர்கள் சவூதியில் தவிப்பு
Next post குர்ஆனை அர்த்தப்படுத்தும் மத அறிஞர் குழு ஒன்றை அமைக்கவுள்ளது பிரிட்டிஷ் அரசு