நேபாளத்தில் மலை பாதை ஒன்றில் பஸ் உருண்டு 14 பேர் பலி
நேபாளத்தில் மலை பாதை ஒன்றில் சென்று கொண்டிருந்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காட்மாண்டுவில் இருந்து பைராஹவா என்ற இடத்திற்கு 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அந்த பேருந்து எதிர்பாராத விதமாக திரிசூலி ஆற்றில் விழுந்தது. 26 பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டதாகவும், 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும், காயமடைந்த இருவர் மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் நேபாள போலீசார் தெரிவித்தனர்.