ஒபாமாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய தயார் -கிளிண்டன் திடீர் அறிவிப்பு

Read Time:1 Minute, 3 Second

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்தலில் பாரக் ஒபாமாவும், ஹிலாரியும் மோதினர். அப்போது ஹிலாரியின் கணவரும், முன்னாள் அதிபருமான பில் கிளிண்டன், ஒபாமாவை கடுமையாக விமர்சித்தார். தற்போது, ஒபாமா வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஒபாமாவை ஆதரித்து பிரசாரம் செய்யத்தயார் என்று பில் கிளிண்டன் அறிவித்துள்ளார். ஒபாமா எப்போது கேட்டுக் கொள்கிறாரோ, அப்போது அவருக்காக பிரசாரம் செய்வேன் என்று கிளிண்டன் கூறினார். அரசியலில் தன்னை விட ஒபாமா `பிஸி’யாக இருப்பதாகவும், ஒபாமாவுடன் தான் தொலைபேசியில் நன்றாக பேசியதாகவும் கிளிண்டனë கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண் விசாரணை அதிகாரி மீது பின்லேடனின் டிரைவராக இருந்த சலிம் அகமது ஹம்டன் செக்ஸ் குற்றச்சாட்டு
Next post நேபாள இளவரசரின் குடும்பம் வெளியேறியது: சிங்கப்பூரில் குடியேறியது