மலையேற்றமே லட்சியம்!!( மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 9 Second

சமீபத்தில் மும்பை வந்தி ருந்தார் ஜெர்லிண்டே கால்டன் பிரன்னர். மலையேறும் வீராங்கனையான இவர் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். ஜெர்லிண்டே ஒரு நர்ஸ். வயது 47. பூர்வீகம் ஆஸ்திரியா. அவருக்கு மலை ஏறுவதில் அபரிமிதமான விருப்பம். ஜெர்மனி யின் ப்ளேக் பாரெஸ்ட் என்ற இடத்தில் வசித்து வரும் இவர், தன் சம்பாத்தியம் முழுவதையும் மலை ஏறுவதிலேயே செலவழிக்கிறார். உலகில் 8000 மீட்டர் உயரத்தில் மொத்தம் 14 மலைகள் உள்ளன. அவை அனைத்திலும் ஏறி வெற்றிக்கொடி நாட்டிய பெண்மணி இவர்தான்!

அது மட்டுமல்ல… அந்த 14 மலைகளையும் ஆக்சிஜன் போர்ட்டர்கள் உதவியில்லாமல் ஏறி இருப்பது இவர் தனிச்சிறப்பு. இந்த 8000 மீட்டர் உயர மலைகளில் மிகவும் கஷ்டமானது கே2 மலை. இதில் ஏறுவது மிக மிக கஷ்டம். அசந்தால் சறுக்கி விடும். கடும் காற்று, கடும் பனிப்பொழிவு இருக்கும். இதனை மீறி ஏற வேண்டும். இந்த மலையில் ஏற 6 முறை முயன்று தோற்றுள்ளார். ஜெர்லிண்டே கடைசி முறை முயற்சித்தபோது உச்சியை நெருங்கி விட்டார். 400 மீட்டர்தான் மீதமிருந்தது உச்சியைத் தொட.

அப்போது அவருடன் ஸ்வீடிஷ் ஆல்ப்ஸ் மலை சார்ந்த பிரெடிரிக் எரிக்‌ஷன் என்பவரும் ஏறிக்கொண்டிருந்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக கால் வழுக்கி, அவர் காணாமலே போய்விட்டார். இதனால் ஜெர்லிண்டே தொடர்ந்து ஏறாமல் திரும்பி விட்டார். ஆனால் அடுத்த வருடமே மீண்டும் முயன்று 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி உச்சியை தொட்டு விட்டார்.

அவருடன் மேலும் நான்கு மலை ஏறுபவர்களும் ஏறி வெற்றி கண்டனர். இந்த கே2 மலையில் இந்தியாவின் எவரெஸ்ட்டுக்கு அடுத்து இரண்டாவது உயரமான சிகரம் உண்டு. இந்தப் பயணத்திற்கு மொத்தம் 45 நாட்கள் ஆயின. இவர்கள் உச்சியை தொட்டபோது வெப்பம் 400 டிகிரி. கடும் பனிப்பொழிவு. நெஞ்சளவு பனிப்பொழிவில், ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து உச்சியை தொட்டனர். 23 வயதில், பாகிஸ்தானில் இருந்த ப்ரொட் பீக் என்ற மலையில் (8027 மீட்டர்) ஏறினார். 5-வது மலையாக நங்கபர்வதத்தில் ஏறியபோது, வியாபார நோக்கில் மலை ஏறுபவராக தன்னை மாற்றிக்கொண்டார். இன்றுவரை எல்லா செலவும் அவருடையதுதான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 70 மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது!!
Next post சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை: மேனகா காந்தி வலியுறுத்தல்!!(உலக செய்தி)