தெலுங்கானாவில் 700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை!!( உலக செய்தி)

Read Time:1 Minute, 19 Second

தெலுங்கானாவில் பட்டுப்போகும் நிலையில் உள்ள 700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏற்றப்படுவது போல் மருந்துகள் ஏற்றி சிகிச்சை அளிக்கப்படுகிறது. தெலிங்கானாவில் மெகபூப்நகரில் மையப்பகுதியின் 700 ஆண்டுகள் பழமையான ஆலமரம் ஒன்று உள்ளது. சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் படர்ந்துள்ள இந்த ஆலமரத்தின் கிளை ஒன்று கடந்த சில காலங்களுக்கு முன்பு பூச்சிகளால் ஆரிக்கப்பட்டது.

இதன் தாக்கம் ஒட்டு மொத்த மரத்திற்கும் பரவி தற்போது ஆலமரம் பட்டு போகும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த ஆலமரத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மனிதர்களுக்கு குளுக்கோஸ் செலுத்துவது போல் ஆலமரத்திற்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த தேவையான மருந்துகள் ஏற்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிரிக்காம பாருங்க செம்ம காமெடி !! (வீடியோ)
Next post நடிகர் வடிவேலு நடிக்க தடை? (சினிமா செய்தி)