அமெரிக்காவில் நடுவானில் விமானத்தின் என்ஜின் வெடித்து விபத்து : பெண் உயிரிழப்பு!!(உலக செய்தி)

Read Time:2 Minute, 21 Second

அமெரிக்காவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் என்ஜின் வெடித்த விபத்தில் பெண் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டல்லாஸ் நோக்கி 149 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தின் என்ஜின் வெடித்தது. இதனால் விமானத்தின் இடது இறக்கை உள்ளிட்ட பகுதிகளில் துளைகள் ஏற்பட்டுள்ளது. மேலும் விமானத்தின் ஜன்னல் கண்ணாடிகளும் உடைந்தன. இதையடுத்து ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்திருந்த ஜெனிபர் ரியோர்டாம் என்ற பெண் தூக்கி வீசப்பட்டார். என்ஜின் வெடித்ததில் பறந்து வந்த உலோகத் துண்டு அவரை தாக்கியது. உடனே சக பயணிகள் கடுமையாக முயற்சி செய்து அந்த பெண்ணை விமானத்தின் உள்ளே இழுத்து உடைந்த ஜன்னலை அடைத்தனர்.

எனினும் உலோகத் துண்டு தாக்கியதில் பலத்த காயமடைந்த அவர், சிறிது நேரத்தில் உயிரிழந்தார். மேலும் 7 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. இதேபோல் விமானத்தில் இருந்த மற்ற பயணிகளுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் ஆக்சிஜன் மாஸ்க் பொருத்தப்பட்டது. இதற்கிடையே, என்ஜின் செயலிழந்ததால் பிலடெல்பியா விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. என்ஜினின் உடைந்த பாகங்கள் பிலடெல்பியாவில் இருந்து 70 மைல் தொலைவிற்கு அப்பால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமானத்தின் என்ஜின் திடீரென்று வெடித்ததற்கு என்ன காரணம் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜீன்ஸ், செல்போனுக்கு தடை!! (உலக செய்தி)
Next post ஆர்யாவின் அதிர்ச்சி முடிவு – இறுதி வெற்றியாளர்? (சினிமா செய்தி)