மேஜிக் காதணிகள்!!(மகளிர் பக்கம்)

Read Time:4 Minute, 20 Second

வாவ்! இந்தத் தோடு எப்படிப் போட்டுக்கிட்ட… கண்டுபிடி பார்ப்போம். எந்தப்பக்கம் திருகாணி இருக்குன்னே தெரியலையே… நானே சொல்றேன். இதுதான் நம் பெண்கள் உலகின் சமீபத்திய ஹாட் டாக். எப்படி அணிந்தோம் எனத் தெரியாத அளவுக்கு ஏகப்பட்ட வித்தியாசமான தோடுகள் அணிவகுக்கத் துவங்கியுள்ளன. இதோ அதன் பெயர்களும் அணியும் விதமும்.

டபுள் சைடட்
ஒரு பக்கம் சிறியது, இன்னொரு பக்கம் பெரியதுமாக இரண்டு பந்துகள் இருக்கும்.மேலும் இவை ஒரு பக்கம் பூ அல்லது கல் என மாறி மாறி வரும். அதாவது திருகாணிக்கு பதில் இரண்டு பக்கமும் தோடுகளாக போடும் விதம். இவை சாலையோர கடைகளிலேயே ரூ.30 துவங்கி ஆன்லைனில் ரூ.250க்கு 12 கலர் காம்போக்களாகவும் கிடைக்கின்றன. இவைகள் மிருகங்களாகவும் வருகின்றன.

ஹக்கி
பெயரே ஹக்கி(அரவணை). காது மடலை அரவணைத்தபடி இருக்கும். சிறிய வகை வளையம், இதயம், சதுரம், அறுங்கோணம், ஸ்டார் வடிவ காதணிகள். இவை நம்மூர் கல்லூரிப் பெண்கள் தங்கத்தில் இரண்டாவது தோடாகவும் அணிவதைப் பார்க்கலாம். சிலவகை இதில் சின்ன செயின் ட்ராப்களும் இருக்கும். இவைகள் பிளாஸ்டிக் துவங்கி தங்கம், பிளாட்டினம், வைரம் வரையென பல விலைகளில் உண்டு. இவைகளை நயன்தாரா அடிக்கடி அணிவதைப் பார்க்கலாம்.

பார்பெல்
பார்ப்பதற்கு சிறிய அளவிலான ஜிம்மில் தூக்கப்படும் வெயிட் போல் இருக்கும். ஒரு சிலவகை நீளமான மேல்புற காது மடல்களை இணைக்கும்படியும் இருக்கும். இதற்கென காதில் பல துளைகளைப் போட்டுக்கொள்ளும் இளசுகளும் உண்டு.இவை ஆண்களாலும் அணியப்படும் காதணி வகை. இவைகள் சாதார ணமாகவே ஃபேன்ஸி கடைகளிலேயே ரூ.10 முதல் கிடைக்கிறது.

பேக் ஸ்டட்
முன்பக்கம் சின்ன ஸ்டட் மட்டுமே இருக்கும். பின்பக்கம் பெரிய அளவிலான பூக்கள். அல்லது வரிசையான கற்கள் என பார்க்க காது மடலை பின்பக்கத்திலிருந்து விரித்துப் பிடித்திருப்பது போல் இருக்கும். இவைகள் ரூ.100 முதல் தரத்திற்கு ஏற்ப ஆன்லைனில் கிடைக்கிறது.

இயர் த்ரெட்
காதில் மெல்லிய செயினில் சின்ன கல் அல்லது வளையம் தொங்கும். பார்க்க நூலை காதில் இரண்டு பக்கமாக தொங்கும்படி அணிந்திருப்பது போல் தோற்றம் கொடுக்கும். ரூ.200 முதல் ஆன்லைன் மற்றும் மால் கடைகளில் வாங்கலாம்.

இயர் ஸ்பைக்
காதுகளில் கூர்மையாக ஒன்றோ அதற்கு மேலோ என அப்படியே நிற்கும் படி அணியும் தோடுகள். ‘இருமுகன்’ படத்தில் ‘கண்ணை விட்டு’ பாடலில் நயன்தாரா அணிந்திருக்கும் மற்றுமொரு தோடு. இவைத் தவிர ‘டேங்லர்’ எனப்படும் பெரிய அளவிலான தொங்கும் தோடு, ‘இயர் கஃப்’ எனப்படும் காதுகளை கவ்விப் பிடித்துக்கொள்ளும் வகை. ‘ஸ்டட்’, ‘ட்ராப்ஸ்’, ‘ஹூப்’ தோடுகள் என தினந்தோறும் பயன்படுத்தும் வகைகளும் உண்டு.

ஸ்லேவ்
ஸ்லேவ்(அடிமை).அடிமைப் போல் தோடு ஒரு சங்கிலியுடன் காது மடலுடன் இணைக்கப் பட்டிருக்கும். இவை மாட்டலாக முடியுடன் அணியும் வகையிலிருந்து வந்த லேட்டஸ்ட் ரகம். இவைகள் கொஞ்சம் விலை அதிகம்
ரூ.400 முதல் ஆரம்பம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொது இடத்தில் பாலியல் வழக்கு குற்றவாளிகளின் கை அல்லது காலை வெட்டலாம் : மதுரை ஆதீனம் யோசனை!!(உலக செய்தி)
Next post துறந்து காட்டுனா திருந்துவீங்களாடா-அப்படி என்னடா இருக்கு அதுல!!(வீடியோ)