பாராளுமன்றத்தில் சாதனை படைத்த 11 நாள் கைக்குழந்தை !!

Read Time:1 Minute, 40 Second

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் புதிய தலைவராக ப்ரிடென்ஸ்டைன் என்பவரை ஜனாதிபதி டிரம்ப் நியமித்தார். ஆனால், இதற்கு பாராளுமன்ற செனட் சபையின் ஆதரவு முக்கியம். இதற்காக நேற்று செனட் சபையில் வாக்கெடுப்பு நடந்தது.

இல்லினாய்ஸ் மாகாண ஜனநாயக கட்சி செனட் உறுப்பினராக டாம்மி டக்வொர்த், பிறந்து 11 நாட்களே ஆன தனது கைக்குழந்தையுடன் ஓட்டெடுப்புக்கு வருகை தந்தார். ஓட்டெடுப்பின் போது உறுப்பினர்கள் தங்களது குழந்தைகளை சபைக்கு அழைத்து வருவது தொடர்பான விதி கடந்த புதன்கிழமை திருத்தப்பட்டது.

இதன்மூலம், ஓட்டெடுப்பின் போது செனட் சபைக்குள் நுழைந்த முதல் குழந்தை என்ற சாதனையை அக்குழந்தை பெற்றுள்ளது. முன்னாள் இராணுவ வீராங்கணையான டாம்மி டக்வொர்த் ஈராக் போரின் போது தனது இரு கால்களையும் இழந்து விட்டார்.

வாக்கெடுப்பின் முடிவில் 50 உறுப்பினர்கள் ஆதரவு, 49 உறுப்பினர்கள் எதிர்ப்பு என்ற நூலிலை வித்தியாசத்தில் ப்ரிடென்ஸ்டைன் நாசா அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்ட மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாயும் மகளும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நிலையில் பலி!!
Next post சத்தீஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுடனான துப்பாக்கிச் சண்டையில் காவலர் ஒருவர் பலி!! (உலக செய்தி)