ரஜினிகாந்த் படத்தை திரையிட எதிர்ப்பு: கன்னடர்கள் ஆர்ப்பாட்டம்

Read Time:2 Minute, 15 Second

நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் “குசேலன்’ திரைப்படத்தை கர்நாடகத்தில் திரையிட எதிர்ப்புத் தெரிவித்து பெங்களூரில் கன்னட சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற கர்நாடகம் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இத் திட்டத்தை எதிர்த்து கன்னடத் திரைப்படத் துறையினர் பெங்களூரில் சில மாதங்களுக்கு முன் போராட்டம் நடத்தினர். அதுபோல் அத் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் திரைத் துறையினர் சென்னையில் போராட்டம் நடத்தினர். இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு உரையாற்றினார். இதற்கு கர்நாடக ரக்ஷணா வேதிகே என்ற கன்னட சங்கத்தினர் கடும் எதிர்ப்புத் தெரித்து வருகிறார்கள். இந்நிலையில் ரஜினிகாந்த் நடித்த குசேலன் படம் விரைவில் திரையிடப்படவுள்ளது. இந்தப் படத்தை கர்நாடகத்தில் திரையிட கர்நாடக ரக்ஷணா வேதிகே கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. சனிக்கிழமை இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெங்களூர் கிரெசன்ட் சாலையில் உள்ள கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக் கட்டடம் முன் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். குசேலன் படத்தை கர்நாடகத்தில் திரையிட தடை விதிக்க வேண்டும் என்று அப்போது அவர்கள் குரல் எழுப்பினர். மேலும் ரஜினிகாந்த் உருவ பொம்மையையும் எரித்தனர். பிறகு அவர்கள் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகளிடம், குசேலன் படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி மனு அளித்துச் சென்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தீவிரவாதிகளை காலவரையின்றி சிறை வைக்க புஷ்சுக்கு அதிகாரம் உண்டு: அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு
Next post தினந்தோறும் கிளாமர் படங்கள்..