இலங்கைப் பொலிஸாரின் பொருட்களை வைத்திருந்த பிரிட்டன் குடியுரிமை பெற்ற நபர் கைது!!

Read Time:1 Minute, 55 Second

இலங்கைப் பொலிஸாரின் உத்தியோகபூர்வ சீருடைகள், உத்தியோகபூர்வ அடையாள அட்டைகள் மற்றும் தோட்டாக்கள் உள்ளிட்ட பொருட்களை வைத்திருந்த ஒருவர் திட்டமிடப்பட்ட குற்ற ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (24) காலை 10 மணியளவில் மீகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாம்பே பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெவ்வேறு தரநிலையில் உள்ள பொலிஸாரின் உத்தியோகபூர்வ சீருடைகள், பொலிஸ் அதிகாரிகளின் உத்தியோகபூர்வ அடையாள அட்டைகள் 16, சேவை ஆவணங்கள் 03, உத்தியோகபூர்வ இலாஞ்சனை பொறிக்கப்பட்ட தொப்பிகள் 02, வேறு நபர்களுடைய தேசிய அடையாள அட்டைகள் 12, கடவுச்சீட்டு 01 உட்பட போலி ஆவணங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட 04 கத்திகள் மற்றும் 20 தோட்டாக்களும் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர் போரகே பியல் சந்திரகுமார என்ற 49 வயதுடைய மீகொட பிரதேசத்தைச் சேர்ந்த பிரித்தானிய குடியுரிமை பெற்றவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், திட்டமிடப்பட்ட குற்ற ஒழிப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாணவனை கொடூரமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பெரியப்பா!!
Next post அணு சக்தி ஒப்பந்தம் மோசமானது என்றால் அமெரிக்க கையெழுத்திட்டது : ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி???(உலக செய்தி)