வெயிட் போடும் நிவேதா தாமஸ் !!(சினிமா செய்தி)
ஓகே கண்மணி, 24, காஞ்சனா 2, மெர்சல் போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் நித்யா மேனன். திடீரென்று அவர் குண்டான தோற்றத்துக்கு மாறினார். இதனால் சில பட வாய்ப்புகளை இழந்தார். இதுபற்றி கேட்டபோது, ‘பட வாய்ப்புகள் நழுவியதுபற்றி கவலையில்லை’ என்றார். அவரது பாணியில் உடலில் வெயிட்போடத் தொடங்கி இருக்கிறார் நிவேதா தாமஸ். கமலின் மகளாக பாபநாசம், விஜய்யின் தங்கையாக ஜில்லா உள்ளிட்ட படங்களில் இவர் நடித்திருக்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் நடிப்பிலிருந்து விடுமுறை எடுத்துக்கொண்டு படிக்கச் சென்றார் நிவேதா. தற்போது தேர்வுகள் முடிந்து மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். தேர்வு எழுத செல்வதற்கு முன் தனது உடற்தோற்றத்தை கச்சிதமாக வைத்துக்கொண்டிருந்த நிவேதா தற்போது கூடுதல் வெயிட்போட்டிருக்கிறார்.
சில தினங்களுக்கு முன் பட விழா ஒன்றில் பங்கேற்க வந்த அவரை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். நிவேதா தாமஸா இப்படி வெயிட்போட்டிருக்கிறார்? என முணுமுணுத்தனர். உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி செய்து கச்சிதமான தோற்றத்துக்கு மாறாவிட்டால் நிவேதாவும் நித்யா மேனன் போலவே பட வாய்ப்புகளை இழக்க நேரிடும் என பேசப்படுகிறது.
Average Rating