ஆப்கன் தலைநகர் காபூலில் அடுத்தடுத்து நடந்த பயங்கர வெடிகுண்டு தாக்குல் – 25 பேர் சாவு!!( உலக செய்தி)

Read Time:2 Minute, 36 Second

ஆப்கன் தலைநகர் காபூலில் நேற்று நடத்தப்பட்ட இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 27 பேர் காயமடைந்தனர். ஆப்கன் தலைநகர் காபூலின் ஷாஸ்தரக்கில் உள்ள உளவுத்துறை கட்டிடம் அருகே நேற்று காலை பொதுமக்கள் கூட்டமாக நின்றிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் ஒருவர், தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை திடீரென வெடிக்கச் செய்தான். இந்த தற்கொலை படை தாக்குதலில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு படை வீரர்கள் விரைந்தனர். குண்டு வெடித்த இடத்தில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், அதே இடத்தில், சிறிது நேரத்தில் பத்திரிக்கையாளரை போல வந்த மற்றொரு நபர் வெடிகுண்டை வெடிக்க வைத்து தாக்குதல் நடத்தினான். இதில் ஏஜென்சி பிரான்ஸ் பிரஸ் நிறுவனத்தை சேர்ந்த தலைமை புகைப்பட கலைஞர் உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர். இந்த இரு சம்பவங்களிலும் 27 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. காயமடைந்த பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என்று ஆப்கன் அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
11 சிறுவர்கள் பலி: தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தகாரில் வெளிநாட்டு ராணுவ வாகன அணிவகுப்பின் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை வெடிக்க வைத்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் 11 சிறுவர்கள் உயிரிழந்தனர். மேலும் வெளிநாடு மற்றும் ஆப்கன் பாதுகாப்பு படை வீரர்கள் 16 பேர் காயமடைந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடல் தியானம்!!(மருத்துவம்)
Next post இங்கிலாந்தில் பாக். வம்சாவளி எம்.பி. அமைச்சரானார்!!( உலக செய்தி)